வீரர்கள் விழிப்படையவேண்டும் என்ற செய்தியை இந்தியாவுடனான தோல்வி கொடுக்கிறது - இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர்

Published By: Vishnu

18 Sep, 2023 | 03:58 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அடைந்த படுதோல்வி பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்தப் போட்டி முடிவானது, பலம்வாய்ந்த அணிகளுக்கு எதிராக கடுமையாக போட்டியிடுவதற்கு வீரர்கள் விழிப்படைய வேண்டும் என்ற செய்தியைக் கொடுத்துள்ளது என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவிக்கிறார்.

இந்தத் தோல்வி உண்மையில் இலங்கை அணியை அதிர்ச்சி அடையச் செய்திருக்கக்கூடும். ஆனால், அந்த அதிர்ச்சியானது நீண்ட கால அடிப்படையில் அவர்களை நன்றாக செய்ய தூண்டியுள்ளது என இந்தியாவுடனான போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார்.

மொஹமத் சிராஜின் ஆக்ரோஷமான அதேவேளை மிகவும் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி சிதைவடைந்த இலங்கை 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி 8ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.

'சில சமயங்களில் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னர் இத்தகைய பேரிடி விழுவது மோசமான ஒன்றல்ல. ஒருவேளை, இந்தியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற அணிகளுடன் மோதுவதற்கு வீரர்களை விழிப்படையச் செய்யும் ஒரு நிகழ்வாக இது இருக்கலாம். எமது போட்டிகளில் நாங்கள் சிறந்து விளங்கவேண்டும். உலகக் கிண்ணப் போட்டிக்கு செல்லும்போது எங்களை ஊக்குவிக்கக்கூடிய ஏதாவது ஒன்று இருக்கக்கூடும்' என சில்வர்வூட் கூறினார்.

'கடமையின்போது இது ஒரு மோசமான நாள் என்பது தெளிவாகிறது. நாங்கள் மிக உயரிய தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டோம். அந்தப் போட்டியை முடித்த விதம் வெட்கத்திற்குரியது. ஒரு மிகப் பெரிய போட்டி வரவிருக்கின்றபோது இத்தகைய நிலைமைகளில் தொடர்ந்து சீவிக்க முடியாது. வீரர்கள் உடை மாற்றும் அறையில் கற்கவேண்டிய பாடங்கள் இருப்பதுடன் கேட்கவேண்டிய கேள்விகள் இருக்கின்றன. நாங்கள் முன்னோக்கி நகரவேண்டும். அதுதான் இப்போதைய தேவை' எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளை இலங்கை வெற்றிகொண்டது குறித்து திருப்தியை வெளியிட்ட கிறிஸ் சில்வர்வூட், மதீஷ பத்திரண, துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோரின் திறமைகளைப் பாராட்டினார்.

'எமது துடுப்பாட்ட வரிசை 7ஆம் இலக்கம்வரை நீண்டு செல்கிறது. ஆனால், திறமை வெளிப்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இது குறித்து கலந்துரையாட வேண்டும். பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறேன். மீண்டும் மீண்டும் இவ்வாறு நடைபெறுவதை அனுமதிக்க முடியாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12
news-image

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர்...

2023-09-28 12:09:25
news-image

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர்-...

2023-09-28 08:05:35
news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59