இந்தியா - பங்களதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அணித் தலைவர் விராட் கோஹ்லியுடைய இரட்டைச்சதத்தின் உதவியுடன் 6 விக்கட்டுகளை இழந்து 687 ஒட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் இரட்டைச்சதம் மற்றும் இரண்டு சதங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 204  ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், முரளி விஜய் 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மறுபுரத்தில் விரிதிமன் சஹா  106 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 60 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஷ் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 687 ஓட்டங்களுடன் இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதுடன், பங்களதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.