திலீபனின் நினைவு ஊர்தி பவனிக்கு வவுனியா பொலிஸார் தடை கோரி விண்ணப்பம்: வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு

Published By: Digital Desk 3

18 Sep, 2023 | 02:49 PM
image

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று திங்கட்கிழமை (18) உத்தரவு பிறத்துள்ளது.  

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் ''திலீபன் வழியில் வருகின்றோம்'' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.

குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இவ் ஊர்திப் பவனிக்கு பொலிசார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30
news-image

மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளையாட்டு கற்பித்துக்கொடுக்கும்...

2025-02-07 17:44:37
news-image

மக்கள் அச்சமடையத் தேவையில்லை : எந்தவொரு...

2025-02-07 17:36:09
news-image

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு...

2025-02-07 16:10:32
news-image

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு...

2025-02-07 16:35:27
news-image

கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

2025-02-07 15:36:35
news-image

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம்...

2025-02-07 15:37:14
news-image

தெஹியோவிட்ட பகுதியில் தீ பரவல் -...

2025-02-07 18:37:55
news-image

லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து...

2025-02-07 16:56:22