தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பிரதர்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பிரதர்'. இதில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், நட்டி என்கிற நட்ராஜ், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ்,, சீதா, அச்யுத்குமார், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.
இதனிடையே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'அகிலன்' எனும் திரைப்படத்தை தயாரித்த ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால்.. அதனை ஈடு செய்வதற்காக நாயகன் ஜெயம் ரவி இப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM