தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'மண்ணாங்கட்டி' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் டூட் விக்கி இயக்கத்தில் தயாராகி தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மண்ணாங்கட்டி'. இதில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த மண்ணின் தொன்மையை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 'மண்ணாங்கட்டி' படத்தின் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நீதி தேவதை கிராமிய பின்னணியில் இடம்பெறுவதும்.
அதன் மீது பேப்பர் ராக்கெட் ஒன்று பறப்பதும்.. அதனை தொடர்ந்து நயன்தாராவின் கண்கள் நீதி தேவதையின் கண்களாக திறப்பதும்.. என அமைக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM