சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தடை உடை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் சிம்ஹா, மிஷா நரங், ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்ரமணிய சிவா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி மேனன் தயாரித்திருக்கிறார்.
இப்ப படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் பிரம்மாண்டமான ஆலய கோபுரத்தின் பின்னணியில் கதையின் நாயகனான சிம்ஹா உற்சாகத்துடன் தோன்றுவது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM