எம்மில் சிலர், மூன்று அல்லது நான்கு மணி தியாலத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற இயல்பை மீறி அடிக்கடி சிறுநீர் கழிப்பர்.
இதனை மருத்துவ மொழியில் ஃப்ரீகுவன்ட் யூரினேசன் என வகைப்படுத்துவர். இதனைக் கண்டறிய தற்போது யூரோடைனமிக்ஸ் என்ற நவீன பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் பாதிப்பு துல்லியமாக அவதானிக்கப்பட்டு, அதற்குரிய முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சிறுநீரகத்தை பாதிக்கும் சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று, நீரிழிவு நோய், புராஸ்டேட் சுரப்பி பாதிப்பு, நரம்பியல் கோளாறுகள், மன அழுத்தம், புராஸ்டேட் புற்றுநோய், ஓவர் ஆக்டிவேட் ப்ளாடர் எனப்படும் சிறுநீர்ப்பையின் இயல்பை மீறிய அதிக திறனுடன் கூடிய செயலாற்றல் ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பர்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட 48 மணி நேரத்திற்கு பிறகு இத்துறை மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதுடன் காய்ச்சல் உள்ளிட்ட வேறு இணை நோய்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
மருத்துவர்கள் இதன் போது சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, முதியவர்களுக்கு சிறுநீர் வெளியேறும் வேக பரிசோதனை, பி.எஸ்.ஏ பரிசோதனை மற்றும் யூரோடைனமிக்ஸ் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இதில் யூரோடைனமிக்ஸ் பரிசோதனை என்பது உங்களுடைய சிறுநீர் பையின் அமைப்பு, அதில் சிறுநீரின் சேமிப்பு, அதன் இயங்குத்திறன் & செயல் திறன் ஆகியவற்றை துல்லியமாக அவதானிப்பர்.
இந்த முடிவுகளைப் பொறுத்து மருந்தியல் சிகிச்சை மூலமாக முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. வெகு சிலருக்கு மட்டுமே பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
டொக்டர் குரு பாலாஜி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM