'நாய் சேகர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சதீஷ் கதையின் நாயகனா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கான்ஜுரிங் கண்ணப்பன்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. இதில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசான்றா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன், எல்லி ஆவ்ரம், ஜேஸன் ஷா, பிஏனெடிக்ட் காரெட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ், சுரேஷ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆண்டிற்குள் இத் திரைப்படம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இதனுடைய ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது 'கான்ஜுரிங் கண்ணப்பன்', வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 'தளபதி 68', ஜெயம் ரவி- ஜெயம் ராஜா கூட்டணியில் 'தனி ஒருவன் 2' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM