'தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்' இசை நிகழ்ச்சி

19 Sep, 2023 | 11:04 AM
image

இலங்கையின் இசைக் கலைஞர்களான கவிகமல் மற்றும் பாசில் ஆகியோர் அக்ஷரா வீனஸ் இசைக்குழுவினரோடு இணைந்து வழங்கிய 'தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்' இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கொழும்பு 07இல் அமைந்துள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினராக அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான வணபிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ கலந்துகொண்டார். 

கொழும்பு பிரதி மேயர் ஜனாப் எம்.ரி.மொஹமட் இக்பால், தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், தேசகீர்த்தி குருசுவாமி பிச்சைக்கிருஷ்ணா (சமாதான நீதவான்), அப்துல்லா இன்டர்ஸ்ட்ரீஸ் அண்ட் பெகேஜிங் நிறுவன பணிப்பாளர் அல்/ஹாஜ் ஹசன் முபாறக், திரைப்பட இயக்குநரும் நடனக் கலைஞருமான ஜனாப் எம்.எப். நய்சர் (சமாதான நீதவான்), வசந்தம் எப்.எம். முகாமையாளர் லெட்சுமணன் கிருபாகரன், பிரபல நடன இயக்குநர் பீ.எம்.நந்தகுமார், சமூக சேவையாளர் சமன் குமார், சமூக சேவகி கெளசலாதேவி கோவிந்தபிள்ளை முதலான பிரமுகர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இதன்போது புதிய அலை கலை வட்டம் நடத்திய எவோட்ஸ்-2022 சர்வதேச கவிதைப் போட்டியில் முதல் பரிசை பெற்றுக்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த கவிஞர் பசுவூர்கோபிக்கு  விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் விருதினை வழங்கி வைத்தார். சிறப்பு அதிதியான தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தெ.செந்தில்வேலவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். புதிய அலை கலை வட்ட ஸ்தாபகர் ராதாமேத்தா, தலைவர் ஷண்மு, பொருளாளர் ஓவியன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40