இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய வேளை தனது உயிர்போய்விடுமோ என பயந்தேன் என பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்;தில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
டின்டெர் டேட்டிங் செயலியில் தான் சந்தித்த பெண்ணிடம் நீ அச்சப்படாதே கர்ப்பம் தரிக்க மாட்டாய் என தனுஸ்க தெரிவித்துள்ளார்.
2022 ஒக்டோபர்29 ம் திகதி டேட்டிங் செயலியில் சந்தித்துள்ளார் அதற்கு நான்கு நாட்களிற்கு பின்னர் சிட்னியின் ஒபரே பாரில் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர் இருவரும் சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர் - அங்கு இலங்கை அணி வீரர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது- பாலியல் உறவின் போது ஆணுறையை அந்தபெண்ணிற்கு தெரியாமல் அகற்றினார் என நீதிமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் தனுஸ்க குணதிலக இதனை நிராகரித்துள்ளார்.
தனுஸ்க குணதிலக தன்னைவலுக்கட்டாயமாக முத்தமிட்டார் தாக்கினார் தன்னை மூச்சு திணறச்செய்தார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
எனது கழுத்திலிருந்து அவரது கையை அகற்ற முயற்சிசெய்தேன் என அந்த பெண் நியுசவுத்வேல்ஸ் நீதிமன்ற விசாரணையின் போது இன்று தெரிpவித்துள்ளார்.
தனுஸ்க ஆணுறையை அகற்றியதை தவிர சம்மதமற்ற விதத்தில் வேறு பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM