(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவின் இயூஜின், ஒரிகொன் ஹேவோட் பீல்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் இறுதிச்சுற்றின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.23 மீற்றர் உயரம் தாவி சுவீடன் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் உலக சாதனை நிலைநாட்டினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் தனது முதலாவது சிரேஷ்ட உலக வெற்றியை மொண்டோ என அழைக்கப்படும் டுப்லான்டிஸ் ஈட்டியிருந்தார்.
6.23 மீற்றர் உயரத்தை ஒரே தடவையில் தாவிய டுப்லான்டிஸ், தனது சொந்த உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்து வரலாறு படைத்தார்.
இந்தப் போட்டியில் முதலாவது முயற்சில் 5.62 மீற்றர் உயரத்தைத் தாவிய டுப்லான்டிஸ் அதன் பின்னர், 5.72 மீற்றர், 5.82 மீற்றர் ஆகிய உயரங்களை இலகுவாக தாவி முடித்தார்.
5.92 மீற்றர் உயரத்திற்கு விடுகை கொடுக்க தீர்மானித்த டுப்லான்டிஸ் 6.02 மீற்றர் உயரத்தை சிரமம் இன்றி தாவி அப் போட்டியில் முதலாம் இடத்தை உறுதி செய்தார். இது அவர் தாவிய 73ஆவது 6 மீற்றரைவிட உயரமான பெறுதியாகும்.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. கோலூன்றிப் பாய்தலுக்கான குறுக்குக் கம்பம் 6.23 மீற்றர் உயரத்தில் வைக்கப்பட்டது.
க்ளமொன்ட் ஃபெராண்ட் அரங்கில் கடந்த பெப்ரவரி மாதம் டுப்லான்டிஸ் நிலைநாட்டியிருந்த உலக சாதனையை விட இது ஒரு சென்றிமீற்றர் கூடியதாகும். ஆனால் அந்த உயரத்தையும் டுப்லான்டிஸ் தாவி இரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார்.
இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கோலுடன் ஓடிய டுப்லான்டிஸ், கிடங்கில் கோலை ஊன்றி உயரே சென்று தாவிய போது 6.23 மீற்றர் உயரத்தில் இருந்த குறுக்குக் கம்பம் ஆடாமல் அசையாம் அப்படியே இருந்தது.
அதன் மூலம் டுப்லான்டிஸ் தனது உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்துக்கொண்டார்.
டுப்லான்டிஸின் உலக சாதனை முன்னேற்றம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM