கொழும்பில் கொட்டாஞ்சேனையிலும் முகத்துவாரத்திலும் இயங்கிவரும் விவேகம் கல்வியகம், அதன் தரம் 6 முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையிலான மாணவர்களின் கணிதத் திறமையை வெளிக்காட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் உள்ள கல்வி நிறுவனத்தில் 'கணிதத் திருவிழா' எனும் கணிதக் கண்காட்சி நிகழ்வொன்றை நடத்தியது.
இதில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ் இலக்கியங்களில் கணிதம், தமிழர்களின் கணிதக் கண்டுபிடிப்புகள், எண்கள் உருவாகி உருமாறி வந்த விதங்கள், கணிதக் குறியீடுகளின் தோற்றம் என பல விடயங்களை சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டினர்.
எண்களை பயன்படுத்தி பல வியத்தகு விளையாட்டுகளை உருவாக்கி பார்வையாளர்களுடன் விளையாடினர்.
இக்கண்காட்சியை காண்பதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கணித விரும்பிகள் என பலர் வருகை தந்தனர்.
இதன்போது இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த விவேகம் கல்வியகம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM