மக்களுக்கு செய்யும் சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு 

17 Sep, 2023 | 08:26 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சுற்றுச்சூழல் அழகாக உள்ளது என்பதற்காக பொலிஸ் நிலையம் அழகு என்று கூறமுடியாது. எமது பொலிஸ் சேவைகளின் ஊடாகவே அது அழகாகிறது. எனவே நாம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டும்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தை நேற்றுமுன்தினம் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் பொலிஸாரிடமிருந்து நேர்மையான மற்றும் தரமான சேவையை எதிர்பார்க்கிறோம். பொலிஸார் மீது கொண்டிருந்த அதிருப்தி நிலை தற்போது இல்லாமல் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. 

நான் அமைச்சராக பதவியேற்ற பிறகு பொலிஸாருக்கு செய்யக்கூடிய அனைத்தையும் செய்துள்ளேன். நாடளாவிய ரீதியில் 500 ஜீப் வண்டிகள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்கு பதிலாக நேர்மையான சேவையை பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். 

மேலும் சுற்றுச்சூழல் அழகாக உள்ளது என்பதற்காக பொலிஸ் நிலையம் அழகு என்று கூறமுடியாது. எமது பொலிஸ் சேவைகளின் ஊடாகவே அது அழகாகிறது. பாராளுமன்றத்தில் கூட பொலிஸாரை திட்டுகிற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் பொலிஸ் நிலையங்களுக்கே வருகின்றனர். 

நாம் மக்களுக்கு செய்யும் சேவைகளை சிறப்பாக செய்ய வேண்டும்.மேலும் இந்த பிரதேசத்தில் உள்ள சாராயம் போதைப்பொருள் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க கூடாது. அப்போதே இந்த பிரதேசம் அழகாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07