இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் இலங்கை 50 ஓட்டங்களுக்கு சுருண்டது

17 Sep, 2023 | 05:38 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மொஹமத் சிராஜ் தனது 2ஆவது ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளினார்.

மொஹமத், சிராஜ், ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர் இலங்கையின் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை என்பதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2012இல் பார்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியிலேயே இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அப் போட்டியில் ஒரு கட்டத்தல் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இநழ்திருந்த இலங்கை, 43 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதுவே இலங்கை அணியின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் அதிரடியாக கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிக மோசமான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் அகன்று செல்லும் பந்தை நோக்கி அரை மனதுடன் துடுப்பை கொண்டு சென்ற குசல் பெரேரா, விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்து ஓட்டமின்றி வெளியேறினார்.

  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு அமைய அதன் பின்னர் இலங்கயின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததுடன் இலங்கையினால் மீள முடியாமல் போனது.  

4ஆவது ஓவரில் மொஹமத் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் பெத்தம் நிஸ்ஸன்க (2), 3ஆம், 4ஆம் பந்துகளில் முறையே சதீர சமரவிக்ரம (0), கடைசிப் பந்தில் தனஞ்சய டி சில்வா (4) ஆகியோரை சிராஜ் ஆட்டம் இழக்கச் செய்தார்.

சிராஜ் தனது அடுத்த ஓவரில் தசுன் ஷானக்கவின் (0) விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்ததுடன் தனது முதலாவது  5 விக்கெட் குவியலைப் பதிவுசெயதார். (12 - 6 விக்)

தொடர்ச்சியாக தனது 6ஆவது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரில் குசல் மெண்டிஸின் (17) விக்கெட்டையும் நேரடியாக சரித்தார். (33 - 7 விக்.)

இந் நிலையில் வளர்ந்துவரும் வீரர் துனித் வெல்லாலகே ஏதாவது சாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஹார்திக் பாண்டியாவின் பவுன்சர் பந்தை அடிக்க விளைந்து ராகுலுக்கு இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (40 - 8)

ஹார்திக் பாண்டியா தனது 3ஆவது ஓவரில் ப்ரமோத் மதுஷான் (1), மதீஷ பத்திரண (0) ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

துஷான் ஹேமன்த 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதில் ஒரு பவுண்டறி விராத் கோஹ்லியின் ஒவர் த்ரோ மூலம் கிடைத்தது.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் ஒரு ஒட்டமற்ற ஓவர் அடங்கலாக 7 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது அதிசிறந்த ஒரு நாள் பந்துவீச்சுப் பெறுதியாகும்.

அவரை விட ஹார்திக் பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

51 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா துடுப்பெடுத்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26
news-image

சீ ஹோக்ஸ் உடனான பரபரப்பான போட்டியில்...

2026-08-04 20:00:25
news-image

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த...

2026-08-04 09:29:41