அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவிற்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்ககோரிய மனுவை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. 

அமெரிக்காவிற்குள், பெரும்பான்மையாக முஸ்லீம் மக்கள் வாழும் 7 நாடுகளிலிருந்து வருவோருக்கு ஏற்படுத்தப்பட்ட, பயணத் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த  ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவிற்கு விதிக்கப்பட்ட தடையை, நீக்ககோரிய மனுவை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. 

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக,  டிரம்பின் பயணத்தடை உத்தரவிற்கு நாடுதழுவிய தடை விதித்து, அந்நாட்டு மாநில நீதிமன்றம் ஒன்று பிறப்பித்த தடை உத்தரவை, நீக்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவை ஏற்க முடியாது என அந்நாட்டின் மேல்முறையீட்டுக்கான பொது அதிகாரமிக்க  9 ஆவது நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் விதித்த தடை உத்தரவை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்கா எதிர்கொள்ளுவதாக கூறப்படும் தீவிரவாத அச்சுறுத்தலை, அரச தரப்பு நிருபிக்கவில்லை என  மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த தீர்ப்பை தொடர்ந்து,  அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு மக்களை கடுமையாக சோதிக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த தீர்ப்பினால், நாட்டின்  தேசியபாதுகாப்பு  ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும், குறித்த உத்தரவு நடைமுறையை சட்டப்பூர்வமாக உருவாக்கவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தள பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.