இந்தியாவின் கையறு நிலை

Published By: Vishnu

17 Sep, 2023 | 05:42 PM
image

ஹரிகரன்

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் 54ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை தொடர்­பான ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்கை குறித்து  கடந்த செவ்­வா­யன்று ஜெனி­வா­வுக்­கான இந்­தியப் பிர­தி­நிதி இந்­திரா மணி பாண்டே, கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­திய அர­சாங்­கத்தின் சார்பில் அவர் நிகழ்த்­திய உரை, ஒரு பக்கம் ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், இன்­னொரு பக்கம் எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும் அமைந்­தி­ருந்­தது.

இலங்கை அர­சாங்கம், வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை செயற்­ப­டுத்­து­வதில், முன்­னேற்­றங்கள் போது­மா­ன­தாக இல்லை என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார் இந்­திரா மணி பாண்டே.

“அனைத்து பிர­ஜை­களின் அடிப்­படை சுதந்­தி­ரங்கள் மற்றும் மனித உரி­மைகள் முழு­மை­யாக பாது­காக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான வாக்­கு­று­தி­களை, விரை­வாக செயல்­ப­டுத்­து­வ­தற்கு, அர்த்­த­முள்ள வகையில் செயற்­ப­டு­மாறு, இலங்கை அர­சாங்­கத்தை  கேட்­டுக்­கொள்­வ­தா­க”­அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்­பது இத­னூ­டாக வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

1987ஆம் ஆண்டு இந்­திய– - இலங்கை உடன்­பாட்டின் பல உள்­ள­டக்­கங்கள், வாக்­கு­று­திகள் இன்­னமும் இலங்கை அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

குறிப்­பாக, 13 ஆவது திருத்­தச்­சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு நீதி­யான, அமை­தி­யான, கௌர­வ­மான வாழ்க்­கையை அர­சாங்கம் உறுதி செய்­ய­வில்லை.

இந்­திய அர­சாங்கம் ஒவ்­வொரு முறையும் இதனை வலி­யு­றுத்­தி­னாலும் கொழும்பு அதனைக் கண்­டு­கொள்­வ­தில்லை.

2011இல் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விவ­காரம் ஜெனி­வா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டதில் இருந்து, தொடர்ச்­சி­யாக இந்­தியா வலி­யு­றுத்தி வரு­கின்ற விடயம், தனக்கு அளித்த வாக்­கு­று­தி­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்­பது தான்.

ஒரு முறை மட்­டுமே இலங்கை தொடர்­பான ஜெனிவா தீர்­மா­னத்­துக்கு இந்­தியா ஆத­ரவு அளித்­தது. அதுவும், காங்­கிரஸ் அர­சாங்­கத்­துக்கு தி.மு.க. கொடுத்த அழுத்­தங்­களால் தான் சாத்­தி­ய­மா­னது.

அதற்குப் பின்­ன­ரான எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும், இலங்கை தொடர்­பான ஜெனிவா தீர்மானங்­க­ளுக்கு இந்­தியா ஆத­ரவு அளிக்­கவோ, எதிர்க்­கவோ இல்லை. நடு­நிலை வகித்து வந்­தி­ருக்­கி­றது.

சர்­வ­தேச அரங்கில் இலங்­கையை ஓரம் கட்டக் கூடாது என்­ப­தற்­கா­கவே, இந்­தியா நடு­நிலை என்ற என்ற நிலைப்­பாட்­டுக்குள் ஒளிந்­தி­ருக்க முற்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனாலும் இந்த நடு­நிலை வகிப்­பினால், இந்­தியா தனது இலக்கை- இலங்­கையில் எட்ட முடிந்­தி­ருக்­கிறா என்­பது தான் கேள்வி.

ஏனென்றால், 1987இற்குப் பின்னர், 13ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்­கத்தை, இந்­தி­யா­வினால் இன்று வரை நடை­மு­றைப்­ப­டுத்தச் செய்ய முடி­ய­வில்லை.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த போது, 13 பிளஸ் என்று இந்­தி­யா­வுக்கு போக்குக் காட்­டினார். அதற்குப் பின்னர் இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலிஸ் தவிர 13ஆவது திருத்தம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கிறார்.

இலங்­கையின் ஒவ்­வொரு ஆட்­சி­யா­ளரும் இந்தியா­வுக்கு ஒவ்­வொரு கால­கட்­டத்திலும்

ஒவ்­வொரு வாக்­கு­று­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

அவ்­வா­றான வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலை இன்றும் தொடர்­வதால் தான், கடந்த செவ்­வா­யன்றும் ஜெனி­வா­வுக்­கான இந்­தியத் தூதுவர் இந்­திரா மணி பாண்டே, முன்­னைய வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் விரை­வாக நிறை­வேற்ற வேண்டும் என்று வலி­யு­றுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் இலங்­கையின் வாக்­கு­று­தி­களை நம்­பு­கி­றதா- அல்­லது நம்­பு­வதை விட வேறு வழி­யில்லை என்ற நிலையில் இருக்­கி­றதா என்று தெரி­ய­வில்லை.

ஜெனி­வாவில் மாத்­தி­ர­மன்றி, இந்­திய–- இலங்கைத் தலை­வர்­களின் உயர்­மட்டச் சந்­திப்­புகள் ஒவ்­வொன்­றிலும், இந்­திய உயர்­மட்ட தலை­வர்கள் மற்றும் அதி­கா­ரி­களின், பய­ணங்­களின் போதும், இந்த வாக்­கு­று­திகள் வலி­யு­றுத்­தப்­படும்.

இலங்­கையும் சில வாக்­கு­று­தி­களை கொடுக்கும். ஆனால் அவை எதுவும் நிறை­வேற்­றப்­ப­டாது.

இவ்­வா­றான நிலையில் தான் வேறு வழி­யின்றி இந்­தியா இந்த வாக்­கு­று­தி­களை நம்­பு­வ­தாக நடிக்­கி­றதா என்று கருத தோன்­று­கி­றது.

இந்­தியப் பிர­தி­நிதி பாண்டே, தனது உரையில்,

“சமத்­து­வ­மான, நீதி­யான மற்றும் அமை­தி­யான முறையில் தமி­ழர்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­றவும், 13ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்தி, மாகாண சபைத் தேர்­தலை நடத்தி,  தமி­ழர்­க­ளுக்கு மரி­யாதை மற்றும் கண்­ணி­ய­மான வாழ்க்­கையை உறுதி செய்­வ­தற்கும் இலங்கை அர­சாங்கம் உறு­தி­ய­ளிக்கும் என நம்­பு­கிறோம்” என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே கருத்து அண்­மையில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யா­வுக்கு மேற்­கொண்ட பய­ணத்தின் போதும், வலி­யு­றுத்­தப்­பட்­டது தான்.

ஆனால், அதற்குப் பின்னர், 13 ஐ நடை­மு­றைப்­ப­டுத்த, மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்த, தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை தீர்த்து வைக்க, தமி­ழர்­களின் நீதி­யான, கௌர­வ­மான, கண்­ணி­ய­மான வாழ்க்­கையை உறுதி செய்ய- இலங்கை அர­சாங்கம் எந்த நட­வ­டி­க­கை­யையும் எடுக்­க­வில்லை.

ஒவ்­வொரு ஜெனிவா கூட்­டத்­தொ­ட­ரிலும் உயர்­மட்டச் சந்­திப்­பு­க­ளிலும் இந்­தியா இந்த விட­யங்­களை குறிப்­பி­டு­கி­றதே தவிர, இந்­தி­யாவும் அதற்கு அப்பால் செல்­வ­தில்லை, இலங்­கையும் அதற்கு அப்பால் நக­ரு­வ­தில்லை.

இரண்டு தரப்­பு­களும் தங்­க­ளுக்­கென ஒரு எல்லைக் கோட்டை வரைந்து கொண்டு, அதற்­குள்­ளேயே நின்று கொள்­கின்­றன.

வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும், அபி­லா­சை­களை நிறை­வேற்றும் என்று இந்­தியா நம்பிக் கொண்­டி­ருக்கும் காலம் போய்க் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களோ, இலங்­கையின் வாக்­கு­று­தி­களோ நிறை­வேற்­றப்­படும் நிலை இன்­னமும் தோன்­ற­வில்லை.

இதற்கு இலங்கை அர­சாங்கம் இந்­தி­யாவின் கரி­ச­னை­களின் மீது கரி­சனை கொள்­ள­வில்லை என்­பதா- அதனை உதா­சீனம் செய்­கி­றது என்­பதா- அல்­லது இந்­தி­யாவை ஏமாற்­று­கி­றது என்­பதா?

ஏனென்றால், இந்­தி­யா­வுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் பல தசாப்­தங்­க­ளாக நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில், அதனை நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­காத நிலையில், இரண்டு தரப்­பு­களும் ஒரு புரிந்­து­ணர்வில் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கங்கள் தோன்­று­வ­தற்குக் கூட வாய்ப்­புகள் உள்­ளன.

ஜெனி­வாவில் உரை­யாற்­றிய இந்­தியப் பிர­தி­நிதி இந்­திரா மணி பாண்டே, இரண்டு பிர­தான அடிப்­ப­டை­களின் கீழ் இலங்கை தொடர்­பான கொள்­கையை இந்­தியா எப்­போதும் கையா­ளு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதில் முத­லா­வது, சமத்­துவம், நீதி, கண்­ணியம் மற்றும் அமை­தி­யான, தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை ஆத­ரித்தல்.

இரண்­டா­வது, இலங்­கையின் ஐக்­கியம், பிர­தேச ஒரு­மைப்­பாடு மற்றும் இறை­யாண்­மையை ஆத­ரித்தல்.

இந்த இரட்டைக் கோட்­பாடு என்­பது, இரண்டு தோணியில் பயணம் செய்­வ­தற்கு ஒப்­பா­னது.

ஏனென்றால், தமி­ழர்­களின் அபி­லா­சைகள், சமத்­து­வ­மான முறையில், நீதி­யான, கண்­ணி­ய­மான அடிப்­ப­டையில் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்று இந்­தியா வலி­யு­றுத்­து­கி­றது.

ஆனால், தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை அவ்­வாறு நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராக இல்லை.

அதே­வேளை இன்­னொரு பக்கம் இலங்கை அர­சாங்­கத்தின் இறைமை, பிராந்­திய ஒரு­மைப்­பாடு, ஐக்­கியம் ஆகி­ய­வற்­றை உறு­திப்­ப­டுத்­து­வதில் இந்­தியா உறு­தி­யாக இருக்­கி­றது.

தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக இலங்கை அர­சாங்­கத்தின் இறைமை, பிராந்­திய ஒரு­மைப்­பாடு, ஐக்­கியம் ஆகி­ய­வற்­றுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்த இந்­தியா தயா­ராக இல்லை.

அதே­வேளை, தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றி வைக்க இலங்கை அரசும் தயாராக இல்லை.

இவ்வாறான நிலையில், இந்தியாவின் இரட்டைக் கொள்கை என்பது முற்றிலும் இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பான ஒன்றாக இருக்கிறதே தவிர, பெயருக்குத் தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பற்றிப் பேசுகிறது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கம் இந்தியாவுக்கு இருந்திருந்தால், அதற்கு புதுடெல்லி வேறு வகையான அணுகுமுறைகளை கையாண்டிருக்கும்.

அத்தகைய அணுகுமுறையை பரிசீலிப்பதற்கு இந்தியா இன்னமும் தயாராக இல்லை. இனிமேலும் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை. இத்தகைய சூழலில், இந்தியா அடுத்தடுத்த தசாப்தங்களிலும் கூட, தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என்று நம்பிக் கொண்டு அறிக்கைகளை தான் வெளியிட முடியுமே தவிர, தமிழர்களின் நலன் சார்ந்தோ- அவர்களின் தீர்வு சார்ந்தோ எந்த வகையிலும் செயற்பட முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06
news-image

வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பா கண்டம்?

2024-06-16 19:18:28
news-image

முஸ்லிம்களின் அபிலாஷையும் ஐந்து கிலோ அரிசிப்...

2024-06-16 16:03:00