Factum Perspective: பிரிக்ஸ், SCO மற்றும் வளர்ந்து வரும் பல்முனை ஒழுங்கு

Published By: Vishnu

18 Sep, 2023 | 12:19 PM
image

சக்தி டி சில்வா

2024 முதல் ஆறு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 15வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் தீர்மானம் எடுத்தது என்ற செய்திகள் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பெய்ஜிங்கில் நடந்த 14வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அதனுடைய அசல் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கு உடன்பட்டமையால், இந்தச் செய்தி தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை.

பிரிக்ஸ் மற்றும் SCO போன்ற பல்தரப்பு மன்றங்கள் சர்வதேச ஒழுங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். உறுப்பினர்களின் அதிகரிப்பு எவ்வாறு விபரிக்கப்பட வேண்டும்? பலமுனைவு ஒழுங்கு உலகில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமா? இந்த இரண்டு வினாக்களையும் வெளிப்படுத்துவதற்கு முன்னர், எது குழுவை முக்கியமானதாக ஆக்குகின்றது என்பதை முதலில் ஆராய்வோம்.

பிரிக்ஸ் தற்போது உலக சனத்தொகையில் 42 சதவிகிதமாகவும் உலகப் பொருளாதாரத்தில் 32 சதவிகிதமாகவும் உள்ளதுடன், குறிப்பாக 2014 இல் புதிய அபிவிருத்தி வங்கியை உருவாக்கிய பிறகு G7 க்கான உலகளாவிய தெற்கு மாற்றீடாக சிலரால் பார்க்கப்படுகிறது. இந்த குழுவானது ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் 1945 நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு துருவ உலகிலிருந்து பலமுனை உலக ஒழுங்கிற்கு மாறுவதை வசதிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

அதாவது ஓர் பல்முனை ஒழுங்கானது, பிற்பாடு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மாற்று நிதி ஏற்பாடுகள் மற்றும் நிறுவனங்களை நிறுவுவதற்கும் அதிகமான வாய்ப்புகளை அனுமதிக்கும் என்று இந்த நாடுகள் நம்புகின்றன. உண்மையில், இன்றுவரை, 40 நாடுகள் பிரிக்ஸ்ஸின் ஒரு பகுதியாக இருப்பதற்காக விண்ணப்பித்துள்ளன என்பது, மன்றானது அமெரிக்க நிதி மேலாதிக்கம் குறித்த உலகளாவிய தெற்கின் அச்சங்களை வினைத்திறனாக தட்டியெழுப்பியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

பிரிக்ஸ் நாடுகள் GDP அடிப்படையிலான கொள்வனவுத் திறன் சமநிலையின் அடிப்படையில் G7 நாடுகளை விஞ்சியிருந்தாலும், , சமீபத்திய ஆண்டுகளில் பிரிக்ஸ் பொருளாதாரங்கள் சிறப்பாகச் செயற்படாததால் பிரதான ஆய்வாளர்கள் நிம்மதியற்ற நிலையில் உள்ளனர்.

இது ஒரு காலத்தில் நினைத்தது போல் இப்போது இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது என்று சில தரப்பிலிருந்தான கூற்றுக்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் பின்னணியில் தான் ஆர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா (ஆபிரிக்காவின் இரண்டாவது அதிகமான சனத்தொகை கொண்ட நாடு), ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் தன்னுடன் சேர்த்துக் கொண்டது. இந்த விரிவாக்கத்தில் சீனா பெரும் பங்காற்றியதாக பலர் நம்புகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில், சீனா படிப்படியாக உலகம் முழுவதும் அதனது தடத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பெய்ஜிங் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்துவதன் மூலமாக பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்குப் பிறகு பிரிக்ஸில் இரு நாடுகளும் சேர்க்கப்பட்டமையால், எனவே, பெய்ஜிங்கும் காரணமாக இருக்கலாம். சீன-ஆபிரிக்கா தலைவர்கள் உரையாடலில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "காலனித்துவம் மற்றும் மேலாதிக்கத்தின் அடையாளங்களை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கும் வகையில்" ஆபிரிக்க நாடுகள் சீன மக்கள் குடியரசுடன் இணைய வேண்டும் என்றும் மறைமுகமாக அதிகமாக சீன நலன்களின் வழியே மேற்கு நாடுகளின் செலவில் "நியாயமான மற்றும் சமமான சர்வதேச ஒழுங்கை" உருவாக்க உதவ வேண்டும் என்றும் கூறினார். 

டொலர் மதிப்பிழப்பு என்பது உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, அதற்குப் பதிலாக உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது போன்ற மாற்றுப் பரிமாற்ற முறைகளுக்கு மாறுவதற்கான ஒரு நாட்டின் தீர்மானத்தை உள்ளடக்கியது. ரஷ்யா-சீனா இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் (USD) பங்கு 2015ல் கிட்டத்தட்ட 90 சதவீதத்தில் இருந்து 2020க்குள் வெறும் 46 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புக்கான சமூக (SWIFT) வலையமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கி வைப்பதற்கான மேற்கத்திய முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் இரு நாடுகளும் எல்லை தாண்டிய கட்டண முறைமையையும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் ஆகிய மூன்று பாரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளும் புதிதாக இந்த தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன என்ற செய்தியைத் தொடர்ந்து, டொலர் மதிப்பிழப்பு குறித்த மேற்கத்திய விடயங்கள் தீவிரமடைந்தன.

வரலாற்று ரீதியாக எண்ணெய் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யப்படுகிறது. அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் தங்களது உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தி நிரந்தரமாக எண்ணெய் வர்த்தகம் செய்வதற்கு தீர்மானித்தால் அது அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சிலர் வாதிடுகின்றனர். மற்றவர்கள் டொலரை முழுவதுமாக குறைக்கும் நடவடிக்கையின்றி ஏற்கனவே யுவான், ரஷ்ய ரூபிள் மற்றும் இந்திய ரூபாய் ஆகியவற்றில் ஏற்கனவே எண்ணெய்க்கான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதற்கான உதாரணங்களை மேற்கோள் காட்டி, அத்தகைய கூற்றுக்களை நிராகரிக்கின்றனர்.

பிரிக்ஸ் நாடுகள் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வதற்கு உள்ளூர் நாணயத்தை நிரந்தரமாகப் பயன்படுத்துகின்றனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அமெரிக்க டொலர்கள் (USD) மற்றும் யுவானைப் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்திற்கு கடனை மீளச்செலுத்துவதற்கான ஆர்ஜென்டினாவின் தீர்மானத்தை குறிக்கும் IMF அறிக்கைகளை மேற்கோள்காட்டும் சிலரின் மதிப்பீட்டின் படி டொலர் மதிப்பை நீக்குவதற்கான போக்குகள் ஏற்கனவே காணப்படுகின்றன.

வேறு சிலருக்கு மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரான கீதா கோபிநாத்தும் சில நாடுகளுக்கு எதிராக டொலரை ஆயுதமாக்குவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், உலகளாவிய நிதியியல் கட்டமைப்பில் அதன் வகிபங்கு குறைவடைந்து செல்வதற்கு பங்களிக்கும் என்று எச்சரித்துள்ளார். இத்தகைய அச்சங்கள் சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக மற்றைய நாணயங்களில் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதாக அறிவித்த பின்னர் தீவிரமடைந்தன.

மற்றையவர்கள் டொலர் மதிப்பிழப்பிற்கு பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை ஒத்திசைக்க வேண்டும் என்று கூறி, ஒவ்வொரு பிரிக்ஸ் தேசமும் ஓர் தனித்துவமான பொருளாதார வடிவத்தையும் பல்வேறு பொருளாதார நலன்களையும் கொண்டிருப்பதால் இது சாத்தியமில்லை என்று கூறி இத்தகைய அச்சங்களை விலக்குகின்றனர். அவர்கள் பொருளாதாரக் கொள்கைகளை ஒத்திசைப்பதில் உள்ள சிரமமும், பெரும்பாலான பிரிக்ஸ் பொருளாதாரங்களுடன் அமெரிக்கா வலுவான வர்த்தக உறவுகளைப் பேணுவதும் இந்த சாத்தியத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது என்று வாதிடுகின்றனர்.

டொலர் மதிப்பிழப்பு விரைவில் நடைபெறுகின்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், பிரிக்ஸ் அதிகாரநிலைகள் உலகளாவிய அரசியலில் தங்களின் முகவரகத்தைப் பயன்படுத்துவதற்கும், உலகளாவிய தெற்கில் இருந்து மற்றைய நாடுகளுடன் இருக்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கும் அதிகரித்த முறையில் முனைகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (SCO) சமீபத்திய முன்னேற்றங்களை ஆராயும்போது இந்த போக்கு தெளிவாகத் தெரிகிறது. இந்த நிறுவனம் 2001 இல் ஷாங்காயில் நிறுவப்பட்டதுடன், ஆரம்பத்தில், சீனா மற்றும் ரஷ்யாவுடன் பல மத்திய ஆசிய நாடுகளைக் கொண்டிருந்தது. இது முக்கியமாக பிராந்தியத்தில் உள்ள மூன்று தீமையான விடயங்களை (பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம்) கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது, அத்துடன் அதன் உறுப்பினர்களிடையே இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துகின்றது.

இலங்கைக்கு 2009 இல் உரையாடல் பங்குதாரர் எனும் அந்தஸ்து வழங்கப்பட்ட அதே நேரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 இல் முழுநேர உறுப்பினர்களாகின. ஈரான் 2023 இல் குழுவில் இணைந்த சமீபத்திய உறுப்பினரானது. SCO இல் பேசிய ஈரானிய ஜனாதிபதி ரைசி, நிச்சயமற்ற வகையில் இல்லாமல், குழுவானது தனது தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதை முனைப்பாக கருத வேண்டும் என்றும், சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டொலரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ஈரான் உட்பட, SCO இப்போது உலக சனத்தொகையில் 43 சதவிகிதமாகவும் ஒருங்கிணைந்த GDP இல் 30 சதவிகிதமாகவும் உள்ளதுடன், அது நிறுவப்பட்டதிலிருந்து 13 மடங்கு அதிகரிப்பை கொண்டிருக்கின்றது. SCO உறுப்பினர்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானமெடுத்தால், SCO மற்றும் பிரிக்ஸ் ஆகியவை உள்ளூர் நாணயங்களுடன் பரிவர்த்தனை செய்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்முனைவுள்ள உலகம் சர்வதேச சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அதிகமான நிகழ்தகவைக் கொண்டிருக்கிறதா? பல்தரப்பு ஏற்பாடுகளில் இணைவதற்கு பெரும் அதிகார சக்திகள் எடுக்கின்ற நடவடிக்கைகளை நாம் வரவேற்க வேண்டுமா? இரண்டு வினாக்களிலும், சர்வதேச உறவுகள் தொடர்பான அறிஞர்கள் உடன்படவில்லை.

ஹான்ஸ் மோர்கெந்தாவ் மற்றும் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆகியோரின் எழுத்துக்களைப் பின்பற்றுகின்ற பாரம்பரிய யதார்த்தவாதிகள் பல்தரப்பு ஏற்பாடுகள் அதிகாரச் சமநிலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றனர். இத்தகைய அதிகாரச் சமநிலைகள் பெரும் சக்திகளால் இலகுவில் போர்க்குணமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதை உறுதி செய்யும்.

ஏனென்றால், மற்றைய பெரும் அதிகார சக்திகள் இத்தகைய அபிலாஷைகளை அடக்கி, அதற்கு எதிராக முனைப்பாகச் சமநிலை செய்து, அதன் மூலமாக சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். எனவே, பாரம்பரிய யதார்த்தவாதிகளின்படி, ஸ்திரத்தன்மை என்பது பல்முனைவுத்தன்மை மூலமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

கென்னத் வால்ட்ஸ் போன்ற கட்டமைப்பு யதார்த்தவாதிகள் அல்லது நவயுக யதார்த்தவாதிகள், மறுபுறம், அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் போது காணக்கூடிய இருமுனைத்தன்மை சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று வாதிடுகின்றனர். அவர்கள் முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தின் பல்முனை அதிகார ஏற்பாட்டைச் சான்றாக மேற்கோள் காட்டுவதுடன், பல்முனை ஒழுங்குகள் இயல்பாகவே மிகவும் ஆபத்தானவையென்பதுடன் கணிக்க முடியாதவை என்று கூறுகின்றனர்.

எந்த சர்வதேச அதிகார கட்டமைப்பு சர்வதேச ஸ்திரத்தன்மையை உருவாக்குகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும், உலகம் மேலும் பல்முனைவுள்ளதாக மாறி வருகிறது என்பது அதிகரித்த முறையில் தெளிவாகின்றது. SCO மற்றும் பிரிக்ஸ் உறுப்பினர்களின் வளர்ச்சி இதை நம் அனைவருக்கும் உணர்த்துகிறது. அப்படியானால், இந்த அபிவிருத்திகளை இலங்கை வரவேற்க வேண்டுமா? ஆம்.

அதிகரித்த தொடர்புகள் நாடுகளுக்கு இடையே வலுவான தொடர்புகளுக்கு வழிவகுப்பதுடன் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் போக்குகளை கட்டுப்படுத்தலாம். மேலும், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய வல்லரசுகளுடன் நட்புறவைச் சார்ந்துள்ள ஒரு சிறிய அரசாங்கமாக, பெரும் வல்லரசுகளுடன் இருக்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளாக பல்தரப்பு மன்றங்களைப் பயன்படுத்துவது மூலோபாய அர்த்தமுள்ளதாக இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில், நான் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு வரவேற்கத்தக்கது என்று நம்புகிறேன்.

மேலும், தற்போதுள்ள சர்வதேச கோவையின் விழுமியங்கள் மற்றும் விதிகள் இரு நிறுவனங்களின் உறுப்பினர்களாலும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டால், பல்முனை உலக ஒழுங்கில் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கான நிகழ்தகவு சமமானதாக இருக்கும். 

சக்தி டி சில்வா சர்வதேச பசிபிக் மன்றத்தில் (2023-2024) இல் வதிவிடமல்லாதோருக்கான கற்கைநெறியை தொடர்வதுடன் கொழும்பு ரோயல் இன்ஸ்டிட்யூட்டில் சர்வதேச உறவுகள் தொடர்பான பாடநெறிகளை கற்பிக்கின்ற வருகைதரு விரிவுரையாளராவார். அவர் முன்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (இலங்கை) விரிவுரையாளராகவும், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றில் சிந்தனைக் குழுவின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். அவரது வெளியீடுகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் சஞ்சிகை, பாதுகாப்பு மற்றும் கொள்கை பகுப்பாய்வு இதழ் மற்றும் தெற்காசிய ஆய்வு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15