ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது வருட நினைவுதின தேசிய நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (16) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்துகொண்டார்.
இதில் அவர், அஷ்ரபின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அவரது வகிபாகம், இலங்கை தேசிய மற்றும் முஸ்லிம் அரசியலில் அவர் புரிந்த சாதனைகள், சர்வதேச தொடர்புகளை பேண அவர் கையாண்ட முறைகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.
மு.கா. தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.மஜிட் (முழக்கம் மஜீத்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தந்திருந்தார்.
இதன்போது பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்துக்காக விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
மேலும், இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிப்பதில் தடை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என கூறப்படும் நபர் அடிக்கடி செய்தியாளர்கள் இருக்கும் பகுதிக்கு வந்து, செய்தி சேகரிக்க தாம் அழைக்கவில்லை எனவும் தமது நிகழ்ச்சிகளை தடை செய்யும் வகையில் செய்தி சேகரிப்பதை தவிர்க்குமாறும் அநாகரிகமான முறையில் தெரிவித்தார்.
இவர் அடிக்கடி செய்தியாளர்கள் இருக்கின்ற பகுதிக்கு வந்து செய்தி சேகரிக்க தாம் அழைக்கவில்லை எனவும் தமது நிகழ்ச்சிகளை தடை செய்யும் வகையில் செய்தி சேகரிப்பதை தவிர்க்குமாறும் அநாகரிகமாக கூறினார்.
(செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு உரிய ஏற்பாடு அங்கு இருக்கவில்லை. இதனால் மேடையில் ஏறி தமது ஊடக உபகரணங்களுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.)
அத்துடன் பிரபல கவிஞரான சோலைக்கிளி அதீக் நேரம் பற்றாக்குறை காரணமாக அஷ்ரபுக்கும் தனக்குமான நெருக்கத்தை பகிர்ந்து, இடைநடுவில் மேடையை விட்டிறங்கினார்.
கவிஞர் மேடையை விட்டுச் சென்றதை தொடர்ந்து, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த இரு செயற்பாடுகளும் கடந்த வெள்ளிக்கிழமை சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளால் நிகழ்வு வேறிடத்துக்கு மாற்றப்பட்டு, மிக துரிதமாக இடம் தெரிவுசெய்யப்பட்டு, மேடை அமைப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, நேர முகாமைத்துவம் பேணப்படாமை காரணமாக நேர்ந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ். தெளபீக், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், செய்யது அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM