(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறுகின்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானித்தது.
எனினும் சிறு மழைத்துளி பொழிவதால் மைதானம் விரிப்புகளால் மூடப்படுகிறது. இதன் காரணமாக போட்டி ஆரம்பமாவது தாமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் உபாதைக்குள்ளான மஹீஷ் தீக்ஷனவுக்குப் பதிலாக துஷான் ஹேமன்தவும் இந்திய அணியில் உபாதைக்குள்ளான அக்சார் பட்டேலுக்கு பதிலாக வொஷிங்டன் சுந்தரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷுடனான போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட விராத் கோஹ்லி, ஹார்த்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை, பிற்பகல் 2.00 மணிவரை கடும் வெய்யில் நிலவியபோதிலும் தற்போது வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கிறது.
எனினும் மூட்டங்கள் கலைந்துசெல்வதால் இயற்கை அன்னை போட்டிக்கு தடையாக இருக்கமாட்டாள் என நம்பப்படுகிறது..
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்திரண.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM