(ஆர்.சேதுராமன்)
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன. கொழும்பு ஆர்.பிரேமதாச அரங்கில் பிற்பகல் 3.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை 16 ஆவது தடவையாக ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற சுற்றுப்போட்டிகளில் இந்திய அணி 7 தடவைகளும் இலங்கை அணி 6 தடவைகளும் சம்பியனாகியுள்ளன.
நடப்புச் சம்பியனான இலங்கை அணி 13 ஆவது தடவையாக இறுதிப்போட்டியில் பங்குபற்றுகிறது. இந்திய அணி 11 தடவையாக இறுதிப்போட்டியில் பங்குபற்றுகிறது.
இவ்வருட ஆசிய கிண்ணத்தைக் கைப்பற்றுவதானது, சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிரிக்கெட் தொடரில் களமிறங்குவதற்கு பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். இதுவும் இன்றைய இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கச் செய்துள்ளது.
இத்தொடரின் சுப்பர் 4 சுற்றில், தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 41 ஓட்டங்களால் வென்றிருந்தது. இத்தொடரில் இலங்கை தோல்வியுற்ற ஒரேயொரு போட்டி அதுவாகும்.
இத்தொடரில் தனது முதல் 5 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி வலிமையான அணியாகத் தென்பட்டது. எனினும், அவ்வணி தனது கடைசி சுப்பர் 4 போட்டியில் பங்களாதேஷிடம் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
2 இலட்சம் டொலர் பரிசு
இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 6.35 கோடி இலங்கை ரூபா) பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 3.17 கோடி இலங்கை ரூபா) வழங்கப்படும்.
காயங்கள்
இன்றைய இறுதிப் போட்டியில் மோதும் இரு அணிகளும் வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளரான மஹீஷ் தீக் ஷன பாகிஸ்தானுடனான போட்டியின்போது, காலில் காயமடைந்தார். இதனால், இன்றைய இறுதிப்போட்டியில் அவர் விளையாட மாட்டார்.
இத்தொடரில் மஹீஷ் தீக் ஷன 233 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் அவர் விளையாடாத போதிலும், எதிர்வரும் உலக் கிண்ணப் போட்டிகளில் அவர் விளையாடுவார் என இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியின்போது இந்திய வீரர் அக்ஸார் பட்டேலின் கையில் பந்து தாக்கியதால், அவரின் கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய இறுதிப்போட்டியில் அவர் பங்குபற்றுவாரா என்பது கேள்விக்குறியான நிலையில், வொஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. ஆசிய விளையாட்டு விழாவுக்கான இந்திய அணியுடன் பெங்களுருவில் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த வொஷிங்டன் சுந்தர், கொழும்பில் இந்திய குழாமுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM