கல்விக்காக பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும் பாடசாலைகளில் நிலவும் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதிருப்பது பாரதூரமான பிரச்சினையாகுமெனவும், நிதியொதுக்கீடுகளை செலவிடவேண்டிய முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வி அமைச்சு தலையீடு செய்யவேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பொன்விழா நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் மாகாண சபைகளுக்கான நிதி தேவைக்கு அதிகமானது என்பதனால் அதனை வேறு விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில மாகாண கல்வி

அமைச்சர்கள் கேட்கின்றனர். அந்தளவுக்கு நிதி கிடைத்திருந்தும் பெரும்பாலான மாகாண பாடசாலைகளில் கழிவறைகள், தளபாட வசதிகள் முழுமைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இதனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளில் முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு

கல்வியமைச்சு தலையிட்டு, குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும் என சுட்டிக்காட்டினார்.