கடற்கரை மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

17 Sep, 2023 | 01:19 PM
image

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுவதோடு வழங்கிய அனுமதிக்கு முரணாக மணல் அகழப்படுவதால் கடற்கரையை அண்டி இருக்கின்ற கிராமங்கள் கடலுக்குள் உள்வாங்கப்படுகின்ற அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியின் மூலம் மக்களில் வாழ்வாதாரத்தை சுரண்டி தனியார் இலாபம் சம்பாதிப்பதாகவும் எதிர்கால சந்ததிக்கான இயற்கை வளம் இல்லாதொழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கருத்துக்களை தெரிவித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிறீபவானந்தராஜா எம்.பி...

2024-12-11 12:38:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-12-11 12:11:38
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட...

2024-12-11 11:56:43
news-image

புத்தளத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு...

2024-12-11 11:42:37
news-image

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூதாட்டி...

2024-12-11 11:57:18
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2024-12-11 11:10:42
news-image

தீயில் முற்றாக எரிந்து நாசமான வீடு!...

2024-12-11 11:15:14
news-image

அனுரவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான...

2024-12-11 11:04:21
news-image

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு அமெரிக்க நிதியை...

2024-12-11 10:38:06
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2024-12-11 10:33:39
news-image

”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை...

2024-12-11 10:44:56
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் சிகிச்சை...

2024-12-11 10:19:06