ஆசிய கிண்ணப்போட்டிகளின் போது இந்தியா பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையிலான போட்டிகளிற்கு மேலதிக நாளை ஒதுக்கியதை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை இது குறித்து மௌனமாகயிருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மழைகாரணமாக இந்திய பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையிலான போட்டிகள் முற்றாக பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தினால் ஆசியகிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மேலதிக நாளை ஒதுக்கியது.
எனினும் ஏனைய போட்டிகளிற்கு அவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை.
இது அநீதியான நடவடிக்கை நியாயமற்றது என கருத்து வெளியிட்டுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் சபை இது குறித்து உடனடியாக கேள்வி எழுப்பியிருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசியே கிரிக்கெட்டை பாதுகாக்கவேண்டியவர்கள் கிரிக்கெட் ஐசிசியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும் ஒரு தனிநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ணப்போட்டிகளில் நீங்கள் ஒரு போட்டிக்காக விதிமுறைகளை மாற்றியுள்ளீர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எங்கே ஐசிசி எங்கே என ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிசியை பல்இல்லாத புலி என வர்ணித்துள்ள ரணதுங்க உலக கிண்ணப்போட்டிகளின் போது இந்தியா பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையிலான போட்டிகளிற்காக விதிமுறைகள் மாற்றப்படுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதன் அதிகாரிகளின் முன்னால் ஐசிசி அடிபணிந்துள்ளது உலககிண்ணப்போட்டிகளின் போது இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகளிற்காக விதிமுறைகளை மாற்றினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM