ஐ.நா. மனித உரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும் - ஐ.நா. இலங்கை பிரதிநிதியுடனான சந்திப்பின் பின் மனோ தெரிவிப்பு 

16 Sep, 2023 | 08:45 PM
image

ஐ.நா. மனித உரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார். இது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், இலங்கை ஐ.நா. நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என த.மு.கூ. தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். 

த.மு.கூ. தலைவர் மனோ கணேசன் எம்.பி. வேலுகுமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் ஐ.நா. தரப்பில் இலங்கை ஐ.நா. பிரதிநிதி மார்க்-அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு தொடர்பில்   மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன. 

இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என நான் முன்னாள் சமீபத்தைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.

15 இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள். இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரேக்கு நாம் வழங்கினோம்.

இலங்கை ஐ.நா. நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,600 க்கும்...

2025-03-20 10:32:06
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17