மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா

16 Sep, 2023 | 08:54 PM
image

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (16.09.2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்திருந்தனர்.

இதன்போது கற்றல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இந்நிகழ்வினை அலங்கரித்ததுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்த கல்வி இராஜாங்க அமைச்சருக்கு இதன்போது பாடசாலை நிருவாகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.

அசாதாரன சூழ்நிலை காரணமாக சாதனைபடைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெறாதிருந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக சாதனை படைத்த மாணவர்களுக்கு இதன்போது கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40