சேமிப்பிற்கு வழிவகுக்கும் மதுவனேஸ்வரர்

16 Sep, 2023 | 08:22 PM
image

எம்மில் சிலர் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டினாலும் அதில் சிறிதளவும் சேமிக்க இயலாது. அதையும் கடந்து சிறிதளவு சேமித்தாலும்... எதிர்பாராத செலவினால் அந்த சேமிப்பும் கரைந்து விடும்.

 உழைக்கத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாம் நம் வாழ்க்கையை திருப்பி உற்றுநோக்கும் போது... சேமிப்பு என்பது சிறிதளவும் இல்லாதிருக்கும். 

இதனால் எம்மை நாமே நொந்து கொள்வோம். வேறு சிலருக்கோ..சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏதேனும் பல காரணங்களால் அது சாத்தியமாவதில்லை. சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பலருக்கு கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும். 

கடன் சுமை குறைய வேண்டும் என்றால்.., மனதில் சேமிக்க தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 இந்த எண்ணம் ஒருபோதும் வலிமை அடையாத சூழலே உங்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்கும். இந்நிலையில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்ற எண்ணியவுடன் ஒரு முறை மதுவனேஸ்வரரை அவரிடத்திற்கு சென்று .. அவர் அருள் பாலிக்கும் இடத்திற்குச் சென்று.. தரிசிக்க வேண்டும் என மனதில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சேமிப்பு என்பது உங்களது பிள்ளைகளுக்கும்.. உங்களது முதுமை காலத்திற்கும்... நீங்கள் உருவாக்கும் பாதுகாப்பு.

சேமிக்க தொடங்க வேண்டும் என்று எண்ணியவுடன் முதலில் மிக மிக குறைவாகவே சேமிக்க தொடங்குங்கள். இதெல்லாம் ஒரு சேமிப்பா...! என எண்ண வேண்டாம். ஏனெனில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என எம்முடைய முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுகாவில் அமையப் பெற்றிருப்பது தான் அருள்மிகு மதுவனேஸ்வரர் ஆலயம். இங்கு சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ஒரு முறை சென்று வந்தால், உங்களது வாழ்வில் சேமிப்பு என்பது தொடக்கம் பெற்று..நல்ல பலனை அளிக்கத் தொடங்கும். இதற்கும் சூட்சுமமான காரணம் உள்ளது. சேமிப்பின் குறியீடாக எம்முடைய முன்னோர்கள் முன்மொழிவது தேனீக்களைத்தான். இந்த ஆலயத்தில் இன்றும் பக்தர்களுக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் சித்தர்களும், மகான்களும் தேனீக்கள் ரூபத்தில் இங்கு உலவிக்கொண்டும், சிவனை தரிசித்துக் கொண்டும் இருப்பதாக நம்புகிறார்கள்.‌

இத்தலத்தில் இருக்கும் இரண்டு தீர்த்தங்களில் உள்ள நீரை சிறிதளவு தலையில் தெளித்துக் கொண்டு.., சிவபெருமானை தரிசித்தால் ...மனம் உருகி பிரார்த்தித்தால், உங்களது சேமிப்பு உயர தொடங்கும். அது பொருளாகவோ இருந்தாலும்... தானியமாகவோ இருந்தாலும்... தங்கமாக இருந்தாலும் அல்லது பணமாக இருந்தாலும் சரி அவற்றை சேமிக்கத் தொடங்குவீர்.

இந்த ஆலயத்தில் மற்றொரு அதிசயமும் உண்டு. நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி அமைந்திருக்கிறது. சூரியனுக்கு நேர் எதிரில் குரு பகவான் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

அம்பாள் மதுவனேஸ்வரி பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார்.

இந்த ஆலயத்திற்கு சுவாதி நட்சத்திரம் நட்சத்திர தினத்தன்று வழிபடலாம் அல்லது உங்களது ஜென்ம நட்சத்திரத்தின் அடுத்த நட்சத்திரமான அதாவது இரண்டாம் நட்சத்திர தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வருகை தந்து, மதுவனேஸ்வரரை தரிசித்தால்.. உங்களை முதுமை காலத்தில் மன மகிழ்ச்சியுடன் பாதுகாக்கும் சேமிப்பை தொடங்குவீர்.‌

இங்கு சேமிப்பு மட்டுமல்ல நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் அல்லது ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட நரம்பியல் பிரச்சனைகளுக்கும் இந்த ஆலயத்தில் சிறந்த தீர்வு கிடைக்கும். இதுவும் பக்தர்களின் நம்பிக்கையாகவே இருக்கிறது.

இத்தலத்தில் சனி பகவான் மற்றும் சித்திரகுப்தர் தனி தனி சன்னதியில் இருப்பதால்.. ஆயுள் விருத்திக்காகவும், ஆரோக்கிய தடை நிவர்த்திக்காகவும் இங்கு வருகை தருபவர்கள் அதிகம்.

உங்களின் யாருக்கேனும் நரம்பியல் பிரச்சனைகள் அல்லது தீர்க்க இயலாத நரம்பியல் சிக்கல்கள் இருந்தாலோ இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வருகை தந்து சிவபெருமானை தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களில் யாருக்கேனும் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதனை வெற்றிகரமாக சாத்தியப்படுத்த மதுவனேஸ்வரரை நேரில் வருகை தந்து தரிசித்து பலன் பெறுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வணிகம் பெருக மேற்கொள்ள வேண்டிய எளிய...

2024-09-17 15:23:32
news-image

கல்வியில் தடையை அகற்றும் இறை வழிபாட்டுப்...

2024-09-17 09:34:38
news-image

முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய...

2024-09-14 16:38:56
news-image

கடன் பிரச்சினை தீர்வதற்கான பண வரவிற்குரிய...

2024-09-14 16:38:22
news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29