டார்க் கொமடி ஜேனரில் தயாராகியிருக்கும் 'எனக்கு எண்டே கிடையாது'

16 Sep, 2023 | 07:58 PM
image

புதுமுக நடிகர்கள் கார்த்திக் வெங்கட்ராமன் மற்றும் விக்ரம் ரமேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'எனக்கு எண்டே கிடையாது' எனும் திரைப்படம், டார்க் கொமடி ஜேனரில் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'எனக்கு எண்டே கிடையாது'. இதில் கார்த்திக் வெங்கட்ராமன், விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, முரளி, சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலாச்சரண் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஹங்க்ரி உஃல்ப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தில் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தேவையற்ற விடயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருந்தாலும் அவசியம் கருதி இடம் பிடித்திருக்கிறது. டார்க் கொமடி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்'' என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right