நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

16 Sep, 2023 | 05:06 PM
image

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த நிபா வைரஸின் பரவல் குறித்து இலங்கையிலும் பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டியிருப்பதால், பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்தும், இந்த நிபா வைரஸ் தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

நிபா வைரஸ் என்பது ஒரு ஆர்.என்.ஏ வகையை சார்ந்த வைரஸாகும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ். குறிப்பாக, வெளவால் மற்றும் பன்றியிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது.‌ இது மனிதர்களை தாக்கி அவர்களது நுரையீரலைப் பாதிக்கும். அதன் பிறகு அது மற்றொரு மனிதருக்கு பரவுகிறது.

இது மனிதர்களை இரண்டு வகையில் தாக்குகிறது. ஒன்று மூளைப்பகுதியை தாக்குகிறது. மற்றொன்று நுரையீரல் மற்றும் இதயத்தை தாக்குகிறது. மூளை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு உறை போல் படர்ந்திருக்கும் மெனிஞ்சஸ் எனும் பகுதியை இது தாக்கி அழிக்கிறது. இதனால் தலைவலி, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மூச்சுத் திணறல், காய்ச்சல், ஃபிட்ஸ், இருமல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தி, பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன்போது உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டியதிருக்கும். ஏனைய கொரோனா வைரஸ், இன்ஃபுளுயென்ஸா வைரஸ் போன்ற பாதிப்பின்போது வழங்கப்பட்ட முதன்மையான நிவாரண சிகிச்சைகள் தான் இத்தகைய வைரஸ் பாதிப்புக்கும் வழங்கப்படுகிறது.

விலங்குகளை அல்லது செல்லப் பிராணிகளை வளர்ப்பவராக இருந்தால், அதனுடன் நெருக்கமான தொடர்பை தவிர்த்துவிடலாம் அல்லது முழு பாதுகாப்பு உடை அணிந்து அதனை பராமரிக்க வேண்டும். பெரும்பாலும் இத்தகைய வைரஸ், குளிர் காலத்தில் அதிகமாக பரவுவதால் இதன்போது விலங்குகளிடமிருந்தும், செல்லப் பிராணிகளிடமிருந்தும் சற்று விலகி இருக்க வேண்டும்.

டொக்டர் சீனிவாச ராஜகோபாலன்

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10