மொராக்கோவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்கள் 32 பேரை இழந்துள்ளார்.
இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
மொராக்கோவை தாக்கிய பூகம்பம் குறித்து கேள்வி எழுப்பியவேளை மொராக்கோ ஆசிரியை உடனடியாக தனது மாணவர்களை பற்றியே பதில் சொல்கின்றார்
பூகம்பம் தாக்கியவேளை அவர் மரகேசில் இருந்தார்,ஆனால் அவரது மாணவர்கள் பலர் வசித்த அடசீல் கிராமம் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியில் காணப்பட்டது.
அராபிய பிரென்ஞ் மொழியை கற்பிக்கும் ஆசிரியை தற்போது தனது பாடசாலைக்கு வந்து தனது மாணவர்களை தேடுகின்றார்.
தனது 32 மாணவர்கள் - ஆறு முதல் 12வயது உயிரிழந்துள்ளமை அவருக்கு தெரியவந்துள்ளது.
நான் அந்த கிராமத்திற்கு சென்று எனது குழந்தைகள் குறித்து கேட்டேன் சொமாய எங்கே யூசுவ் எங்கே அவன் எங்கே அவள் எங்கே என கேட்டேன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என பதில் வந்தது என அவர் தெரிவித்தார்.
நான் எனது வகுப்பின் மாணவர் பதிவேட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக அழைப்பதை நினைத்துப்பார்த்தேன் என அவர் குறிப்பிட்டார்
செப்டம்பர் 8 ம் திகதி மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தினால் கொல்லப்பட்ட 3000க்கும் அதிகமானவர்களில் அந்த மாணவர்களும் உள்ளனர்.
மொராக்கோவின் தென்பகுதியில் உள்ள மராகேஸ் என்ற நகரமே மோசமாக பாதிக்கப்பட்டு;ள்ளது அடசீல் அந்த பகுதியில் உள்ள கிராமம்.
ஆறுவயது கட்ஜாவிற்கு என்ன நடந்தது என தான் கேள்விபட்டதாக ஆசிரியை எல்படல் தெரிவித்தார்.
அந்த சிறுமியின் உடலை தந்தை தாய் மற்றும் இரு சகோதரிகளின் உடல்களிற்கு மத்தியில் மீட்டதாக மீட்புபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் தங்கள் கட்டிலில் காணப்பட்டனர் – அவர்கள் அனைவரும் அந்த பாடசாலை மாணவர்கள்.
கதிஜா எனக்கு மிகவும்பிடித்த சிறுமி அவள் சிறந்தவள் உற்சாகமானவள் பாடுவதில் ஆர்வம் கொண்டவள் எனது வீட்டிற்கு வருவாள் அவளிற்கு கற்பிப்பதும் அவளுடன் பேசுவதும் எனக்கு பிடிக்கும் என்கின்றார் அந்த ஆசிரியை .
தனது மாணவர்களை அந்த ஆசிரியை தேவதைகள் கற்றலில் ஆர்வம் உள்ளவர்கள் என வர்ணித்துள்ளார்.
வறுமை வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்வதே வாழ்க்கையின் மிகமுக்கியமான விடயம் என கருதினார்கள் என அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.
எங்கள் இறுதி வகுப்பு பூகம்பம் தாக்குவதற்கு ஐந்து மணித்தியாலத்திற்கு முன்னர் நடந்தது நாங்கள் மொராக்கோவின் தேசிய கீதத்தை கற்றுக்கொண்டிருந்தோம் திங்கட்கிழமை அதிகாலை பாடசாலையின் முன்பாக பாடஎண்ணியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆமைதியான குரலில் கதைத்தாலும் அந்த ஆசிரியை கடும் மனஉளைச்சலில் சிக்குண்டுள்ளார், தனது பாடசாலை மாணவர்களிற்கு என்ன நடந்தது என்பதை உணரமுடியாத நிலையில் காணப்படுகின்றார்.
என்னால் உறங்கமுடியவில்லை நான் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளேன் மக்கள் நான் அதிஸ்டசாலி என்கின்றனர் ஆனால் நான் எப்படி தொடர்ந்து வாழ்வது என்ற கேள்வியில் சிக்குண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM