இங்கிலாந்து சத்திரசிகிச்சை அறைகளில் பெண்  மருத்துவர்கள் மீது ஆண் சகாக்களால் பாலியல் தொந்தரவு, துஷ்பிரயோகம்

Published By: Sethu

16 Sep, 2023 | 11:07 AM
image

(ஆர்.சேதுராமன்)

இங்கிலாந்தின் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆண் சத்திரசிகிச்சையாளர்களால் தாம் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகுவதாக பெண் சத்திரசிகிச்சையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தாம் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

புதிய ஆய்வொன்றின் மூலம் இவ்விடயம் அம்பலமாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் எக்ஸட்டர் பல்கலைக்கழகம், சர்றீ பல்கலைக்கழகம், சத்திரசிகிச்சைகளில் பாலியல் ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஆராயும் மருத்துவர்கள் - ஆய்வாளர்களைக் கொண்ட அமைப்பு ஆகியன இணைந்து மேற்படி ஆய்வை நடத்தியுள்ளன.

'பிரிட்டிஷ் ஜேர்னல் ஒவ் சேர்ஜரி' எனும் சஞ்சிகையில் இது தொடர்பான ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் பிபிசியிடம் பிரத்தியேகமாக பகிரப்பட்டுள்ளன.

சத்திரசிகிச்சை அறையில், சத்திரசிகிச்சை நடத்தப்படும்போது  பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் பலருடன் பிபிசி கலந்துரையாடியுள்ளது.

சிரேஷ்ட சத்திரசிகிச்சையாளர்களால் பெண் பயிலுநர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், அது தற்போது இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையிலும் இடம்பெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(file photo)

இந்த ஆய்வில் தெரியவந்த விடயங்கள்; உண்மையில் அதிர்ச்சிகரமானவை என இங்கிலாந்தின், சத்திரசிகிச்சையாளர்களுக்கான றோயல் கல்லூரி தெரிவித்துள்ளது. 

இந்த ஆய்வில், பங்குபற்றிய, பெண் சத்திரசிகிச்சையாளர்கள், சுமார் மூன்றில் இரு பங்கினர், தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், மூன்றில் ஒரு பங்கினர் கடந்த ஐந்து வருட காலத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவி;த்துள்ளனர்.

இச்சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்தால் தமது தொழிற்சார் வாழ்க்கை பாதிக்கப்படும் என இப்பெண்கள் அச்சமடைந்திருந்ததுடன், இது தொடர்பில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதில் நம்பிக்கையின்றி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூடித் எனும் பெண் மருத்துவர் தற்போது தகுதிவாய்ந்த சத்திரசிகிச்சை ஆலோசகராக விளங்குகிறார்.

தனது தொழிற்சார் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில், சத்திரசிகிச்சை அறையில் மிகக் குறைந்த அதிகாரமுடையவராக தான் இருந்தபோது பாலியல் தாக்குதலுக்கு தான் ஆளானதாக பிபிசியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

“ஓர் ஆண் சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணருக்கு வியர்வை ஏற்பட்டபோது,  அவர் திரும்பி எனது  நெஞ்சில் தலையைவைத்தார். அவர் தனது நெற்றியை என்னில் துடைத்துக்கொள்கிறார் என நான் உணர்ந்தேன். இரண்டாவது தடைவ அவர் செய்தபோது, நான் துவாய் ஒன்றை அவருக்கு வழங்கினேன்.

அப்போது அவர், 'வேண்டாம். இது மிக வேடிக்கையாக உள்ளது' என அவர் பதிலளித்தார். நான் அவமானமாக உணர்ந்தேன்' மருத்துவர் ஜூடித் கூறியுள்ளார்.  அப்போது தனது சகாக்கள் அமைதியாக இருந்தனர் எனவம் அவர் கூறியுள்ளார். அந்நபர் அந்த அறையிலிருந்த மிக சிரேஷ்ட அதிகாரி அல்லர். ஆனாலும் அவரின் நடவடிக்கை தவறாக கருதப்பட மாட்டாது என அவர் அறிந்திருந்தார்” எனவும் ஜூடித் கூறியுள்ளார். 

ஜூடித்துக்கு சத்திரசிகிச்சை அறையில் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. வேறு சிலருக்கு வைத்தியசாலைக்கு அப்பாலும் பாலியல் துஷ்பிரயோகளுக்கு ஆளாகினர்.

ஆன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண் மருத்துவ அதிகாரி கூறுகையில், தான் பயிலுநராக இருந்த காலத்தில்,  மருத்துவர்களுக்கான மாநாடொன்றுடன் இணைந்த சமூக நிகழ்வொன்றில் பங்குபற்றச் சென்றிருந்த போது, சிரேஷ்ட சத்திரசிகிச்சையாளரான ஆண் ஒருவரால் தனது சம்மதமின்றி பாலியல் உறவுகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 “இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் மௌனத்தைக் கடைபிடிக்கும் கலாசாரம் உள்ளது என பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சை பயிற்சியானது, சிரேஷ்ட த்திரசிகிச்சையாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் தங்கியுள்ளது.

அதிகாரமும் தமது எதிர்கால தொழிற்சார் வாழ்க்கையில் செல்வாக்கையும் செலுத்தக்கூடிய நபர்கள் தொடர்பில் பேசுவது ஆபத்தானது என பெண்கள் கூறினர்' என பிபிசி தெரிவித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட சத்திரசிகிச்சையாளர்களான ஆண்களும் பெண்களும் அநாமதேயமாக இந்த ஆய்வில் பங்குபற்ற அழைக்கப்பட்டனர். இதற்கு 1,434 பேர் பதிலளித்தனர். அவர்களில் அரைவாசிப் பேர் பெண்கள் ஆவர்.

அவர்களில் 63 சதவீதமான பெண்கள், தமது சகாக்களின் பாலியல் தொந்தரவுகளுக்கு தாம் இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.

30 சதவீதமான பெண்கள், சகாக்களின் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் 11 முறைப்பாடு பதிவாகியுள்ளன.

90 சதவீதமான பெண்களும், 81 சதவீதமான ஆண்களும், பாலியல் ரீதியான ஒழுங்கீன செயற்பாடுகளை தாம் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தாம் இத்தகைய ஒழுங்கீன நடத்தைகளை எதிர்கொண்டதாக ஆண்களும் தெரிவித்துள்ளனர். 24 சதவீதமான ஆண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். 

“நாம் கண்டறிந்த விடயங்கள், சத்திரசிகிச்சையாளர் தொழில் தொடர்பில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடும்” என எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் பெகினி தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுத்  தகவல்கள் அதிர்ச்சிகரமானவை என  இங்கிலாந்து சத்திரசிகிச்சையாளர்களுக்கான றோயல் கல்லூரியின் தலைவர் டிம் மிட்செல் தெரிவித்துள்ளார்.

“இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை அதிகாரி டாக்டர் பின்ட்டா சுல்தான் கூறுகையில், 'வைத்தியசாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகள் தேவை என்பதை இந்த அறிக்கை தெளிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“தொந்தரவுகள், தகாத நடவடிக்கைகளால் பாதிக்ப்படுபவர்கள் முறைப்பாடு செய்வதற்கான தெளிவான முறைமையை ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்குமான அர்ப்பணிப்புகள் உட்பட பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை நாம் ஏற்கெனவே செய்துள்ளோம்” எனவும் அவர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15