வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த வெடிகுண்டு ஒன்றினை நேற்று முன்தினம் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று (10) சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வெகுண்டை மீட்டு, செயலிழக்கச் செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.