இந்தியாவுக்கு 266 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தத பங்களாதேஷ்

15 Sep, 2023 | 08:57 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் கடைசி சுப்பர் 4 போட்டியில் இந்தியாவுக்கு 266 ஓட்டங்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயித்துள்ளது.

அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் அவர்களிடையே 5ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட இணைப்பாட்டமும் பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தன.

பங்களாதேஷ் அணி ஒரு மாற்றத்துடனும் இந்திய அணி 4 மாற்றங்களுடனும் களம் இறங்கின.

பங்களாதேஷ் அணியில் மொஹமத் நய்முக்கு பதிலாக தன்ஸித் ஹசன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்திய அணியில் விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட்  பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ப்ரசித் கிருஷ்ணா, மொஹமத் ஷமி ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (13), லிட்டன் தாஸ் (0), அனாமுல் ஹக் (4), மெஹிதி ஹசன் மிராஸ் (13) ஆகிய நால்வரும் பிரகாசிக்கத் தவறினர்.

இதன் காரணமாக 14 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஷக்கிப் அல் ஹசன் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் நசும் அஹ்மத் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

மெஹிதி ஹசன் 29 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை வருகை தரும் இந்திய ஏ...

2026-05-16 09:43:45
news-image

சென்னை பந்துவீச்சாளர்களை வாட்டி எடுத்தார் மிச்செல்...

2026-05-16 03:41:15
news-image

இலங்கை - நியூஸிலாந்து மகளிர் ஏ...

2026-05-16 03:37:30
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 8 புள்ளிகளை இழந்தது...

2026-05-15 16:30:14
news-image

மும்பைக்கு ஆறுதல் வெற்றி ; பஞ்சாபுக்கு...

2026-05-15 10:26:29
news-image

மத்திய மற்றும் தெற்காசிய அணிக்கு எழுவர்...

2026-05-14 17:28:24
news-image

விராத் கோஹ்லி 9வது ஐபிஎல் சதம்,...

2026-05-14 09:36:21
news-image

SLC கிரிக்கெட் போட்டிகள் யாவும் பிற்போடப்பட்டன

2026-05-13 18:14:09
news-image

விளையாட்டுத்துறையில் புகழ்பெற்ற நிர்வாகி பிரேமா பின்னவல...

2026-05-13 17:34:45
news-image

LPL தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20...

2026-05-13 14:38:22
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை படுதோல்வி அடையச் செய்து...

2026-05-13 12:59:02
news-image

பாகிஸ்தானை கடைசி ஆட்ட நேர பகுதியில்...

2026-05-12 21:39:00