இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திர நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வரும் நடிகை திரிஷா, கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும்' தி ரோட் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஓ விதி..' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தி ரோட்'. இதில் திரிஷா, ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம். எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல. ராமமூர்த்தி, லஷ்மி பிரியா, செம்மலர் அன்னம், ராட்சசன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். சாலை மார்க்கமான பயணத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஏ ஏ சினிமா பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஒக்டோபர் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத, சாம் சி எஸ் இசையில் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவில் திரிஷாவின் நடிப்பும், சித் ஸ்ரீராமின் பாவனைமிக்க தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM