நடிகர்கள் விமல் மற்றும் சூரி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'படவா' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் கே. வி. நந்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'படவா'. இதில் விமல், சூரி, நடிகை ஸ்ரீதா, கே ஜி எஃப் புகழ் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி எஸ் ஆர், சரவண சக்தி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோன் பீற்றர் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் ஜோன் பீற்றர் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில், இதன் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னை கமலா படமாளிகை வளாகத்தில் பிரத்தியேக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் அண்டனி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
விஜய் அண்டனி பேசுகையில், '' இப்படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஜோன் பீற்றர் எமக்கு 25 ஆண்டுகளாக தெரியும். நான் தொடக்க காலத்தில் பாடல் பதிவரங்கை நடத்துவதற்கும்..
பராமரிப்பதற்கும் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்தபோது எமக்கு ஆதரவளித்தார். இந்தப் படத்தில் அவருடைய இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கிறது.
அவருடைய கடின உழைப்பிற்கு திரையுலகில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார். இப்படத்தில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விமலும் சூரியும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதுவே இப்படத்திற்கு வெற்றியைத் தேடித் தரும்'' என்றார்.
இதனிடையே இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் கே. வி. நந்தா பங்குபற்றவில்லை.
அவருடைய தந்தையாருக்கு பூர்வீக கிராமத்தில் சுகவீனம் ஏற்பட்டதாகவும், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய பணியின் காரணமாக வர இயலவில்லை என்றும் அவர் சார்பாக வாசிக்கப்பட்ட வாழ்த்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் படக் குழுவினரை விசாரித்த போது, தயாரிப்பாளர் ஜோன் பீற்றருக்கும், இயக்குநர் நந்தாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும், இதனால் தான் அவர் பட விழாவில் பங்குபற்றவில்லை என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM