பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளிடத்திலும், சில வயதான பெரியவர்களிடத்திலும் உர்டிகாரியா பிக்மெண்டோசா எனப்படும் தோல் பாதிப்பு ஏற்படுகிறது.
தோலில் ஏற்படக்கூடிய கோளாறுகளில் ஒன்றான இது, கடுமையான அரிப்பு மற்றும் தோலில் ஏற்படும் பல வண்ண திட்டுகளை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
இத்தகைய தோல் பாதிப்பின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடக்கூடியது. இருப்பினும் தோலில் ஏற்படும் பழுப்பு வண்ணத்திலான திட்டுகளே இதன் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.
மருத்துவ மொழியில் விளக்க வேண்டும் என்றால் தோலில் உள்ள மிகுதியான அழற்சியை கொண்ட அணுக்களாகும். இவை உங்கள் உடலை பாதிக்கும் தொற்றுகளுடன் சண்டையிட நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் செல்கள், ஹிஸ்டமீனை உருவாக்கி வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டமினின் பாதிப்பால் திசுக்களில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படுகிறது.
உடற்பயிற்சி, பருவநிலை மாறுபாடு, காரமான உணவு, சூடான திரவங்கள் அல்லது மது அருந்துதல், தோலை அழுத்தமாக தேய்த்தல், தொற்றுகள்... இவற்றின் காரணமாக உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள ஹிஸ்டமின் தூண்டப்பட்டு.. இத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.
தலைவலி, இயல்பான அளவைவிட அதிக அளவிலான இதயத்துடிப்பு, மூச்சிரைப்பு, வயிற்றுப்போக்கு... ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
ரத்த பரிசோதனை, சிறுநீரில் இருக்கும் ஹிஸ்டமினின் அளவு குறித்த பரிசோதனை, என்சைம்கள் எனப்படும் நொதிகள் குறித்த பரிசோதனை, தோல் திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள பரிந்துரைப்பர்.
பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் மருந்தியல் சிகிச்சை ஸ்டீராய்டு மருந்தியல் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் முதன்மையான நிவாரணம் அளிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது லேசர் தெரபி மூலமும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
டொக்டர் தீப்தி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM