தயாரிப்பு : உத்ரா புரொடக்ஷன்ஸ் & பி. எஸ். எஸ். புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : சரத், அயிரா, நரேன், அருவி மதன்,இளையா உள்ளிட்ட பலர்.
இயக்கம் : செ. ஹரி உத்ரா
மதிப்பீடு : 2/5
செ. ஹரி உத்ரா இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், திரைத்துறையில் பணியாற்றி, சிறிய முதலீட்டு படங்களை திரைக்கு கொண்டு வருவதில் ஆர்வத்துடன் உழைத்து வருபவர்.
இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு' எனும் திரைப்படம் ரசிகர்களை திருப்தி அளித்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
படத்தின் தலைப்பிலேயே கால்பந்தாட்ட குழு என்று இருப்பதால் படத்தின் கதை உதைபந்தாட்டத்தை பற்றியது என தெரிந்து விடுகிறது.
கூலி தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை தொழிலாளர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, மாற்று திறனாளி பயிற்சியாளர் ஒருவர் உதை பந்தாட்ட பயிற்சி அளித்து , உதை பந்தாட்ட குழு ஒன்றை உருவாக்குகிறார். தன்னுடைய ஆசை நிறைவேறாத காரணத்தினால் அதனால் ஏற்பட்ட வலி மற்றவர்களுக்கு உண்டாக கூடாது என்பதனை அறிந்து..
அந்த கூலி தொழிலாளர்களின் ஏழை பிள்ளைகளுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடுவதற்கான உதைபந்தாட்ட குழுவில் இடம் கிடைப்பதற்காக போராடுகிறார். ஆனால் தகுதி இருந்தும்... திறமை இருந்தும்... அதிகார வர்க்கம் மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரின் குறுக்கீடு காரணமாக அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடையும் அந்த இளம் உதைபந்தாட்ட வீரர்கள் எடுக்கும் அதிரடி முடிவுதான் இப்படத்தின் திரைக்கதை.
கதையின் நாயகனான சரத்- கோபமும், ஆத்திரமும் கொண்ட இளைஞனாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். காதலி ஐராவிடமும் ஷட்டிலான பர்பாமன்ஸை காட்ட.. அவர் 'தாக்கு தாக்கு தாக்குறா...' என்ற பாடலை பாடி.. துள்ளல் ஆட்டமும் ஆடி.. சிரிக்கவைக்கிறார்.
நாயகி அயிராவிடம் இளமை, அழகு இரண்டும் கலந்து ரசிகர்களை கவர்ந்தாலும் அவருடைய காட்சிகள் குறைவு என்பதால் ரசிகர்களுக்கு ஆதங்கமே மிஞ்சுகிறது.
உதைபந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் அருவி மதன் இளம் வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் தன் அனுபவத்தை பேசி அவர்களை உத்வேகப்படுத்துவதில் மனதை கவர்கிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் நரேன்- தன் பாத்திரம் அறிந்து பொருத்தமாக நடித்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் உள்ளூர் கால்பந்தாட்ட போட்டியை காண்பிப்பதில் படத்தொகுப்பாளர் உறங்கி விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் அவருடைய கத்திரி மிஸ்ஸிங். உள்ளூர் போட்டி என்றாலும்.. பட்ஜெட் குறைவு என்றாலும் மைதானத்தில் கிடைத்த வாய்ப்புகளை ஒளிப்பதிவாளர் கற்பனையுடன் காண்பிக்க தவறி இருக்கிறார். இந்த போட்டியில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய நடிகை சோனாவின் திரை தோன்றல் மட்டுமே ஆறுதல்.
ஆதிக்க வர்க்கத்தை பணிய வைப்பதற்கு வன்முறையும், குற்றச் செயலும் தான் உடனடி நிவாரணமும், நிரந்தர தீர்வும் என இயக்குநர் முன்வைத்திருப்பதை உதை பந்தாட்ட வீரர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் விளையாட்டு வீரர்கள் தனித்திறனை தனித்துவமாக காட்டும் ஜனநாயக உணர்வுமிக்கவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறது. புது முகங்களை வைத்து குறைந்த முதலீட்டில் இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சியை மட்டும் பாராட்டலாம்.
எண்6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு- ரெட் கார்ட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM