கனடா அனுப்புவதாக பெண்ணை ஏமாற்றியவர் காத்தான்குடியில் கைது

Published By: Digital Desk 3

15 Sep, 2023 | 03:52 PM
image

சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், சமூக வலைத்தளத்தில் , கனடா அனுப்பி வைக்க முடியும் என வந்த விளம்பரம் ஒன்றினை நம்பி, விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, விசாரித்த போது, கனடா அனுப்பி வைப்பதாக அப்பெண்ணுக்கு உறுதி அளித்துள்ளார். 

அதனை நம்பி , அந்த பெண் தொலைபேசியில் தன்னுடன் கதைத்தவருக்கு 10 இலட்ச ரூபாய் முற்பணமாக வழங்கியுள்ளார். 

அதன் பின்னர் நீண்ட காலமாக தனது கனடா பயண ஒழுங்குகள் எதுவும் நடைபெறாததால், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த , பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 57 வயதுடைய நபரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதனை கண்டறிந்து, காத்தான்குடியில் வைத்து அவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று வியாழக்கிழமை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மன்று அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள்...

2024-02-28 17:34:29
news-image

பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்டு அரசியல்...

2024-02-28 18:39:22
news-image

சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ...

2024-02-28 18:10:39
news-image

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை...

2024-02-28 18:03:47
news-image

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள்...

2024-02-28 17:33:06
news-image

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால்...

2024-02-28 17:42:48
news-image

குடிநீர் கிடைப்பதில்லை ; லிந்துலையில் மக்கள்...

2024-02-28 17:11:43
news-image

1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பை...

2024-02-28 17:09:46
news-image

சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்...

2024-02-28 17:10:31
news-image

இராணுவத்தால் கையளிக்கப்பட்ட நல்லிணக்கபுர மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட...

2024-02-28 17:08:30
news-image

இலங்கையில் நீண்டகாலம் மோதலில் ஈடுபட்ட இரண்டு...

2024-02-28 17:05:54
news-image

முசோரியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் இலங்கையின்...

2024-02-28 17:07:39