மரணத்தின் அணை- சுனாமி போல வந்த நீரோட்டம் - பிணக்காடாக காணப்படும் லிபிய நகரம்

Published By: Rajeeban

15 Sep, 2023 | 03:39 PM
image

லிபியாவின் டெர்னா நகரை அழித்துச்சிதைத்துள்ள பெரும் வெள்ளத்திலிருந்து உயிர்தப்பியவர்கள் சுனாமி போன்ற நீரோட்டத்தினால் தங்கள் நகரம் அழிக்கப்படுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர்தாங்கள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கின்றனர்.

மக்கள் தங்கள் கைகளால் நிலத்தை தோண்டி தங்கள் உறவுகளை தேடும் பகுதிகளிற்கு ஸ்கைநியுசின் செய்தியாளர்கள் சென்றுள்ளனர்.

கடும் மழை காரணமாக இரண்டு அணைகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட  வெள்ளம் காரணமாக  டெர்னா நகரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்கை நியுஸ் தெரிவித்துள்ளது.

இரண்டு அணைகளில் ஒன்று தற்போது மரணத்தின் அணை என தெரிவிக்கப்படுவதாக ஸ்கை நியுசின் செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கை அனர்த்தம் இடம்பெற்று ஒரு வாரமாகின்ற போதிலும் பொதுமக்கள் இன்னமும் முற்றாக அதிர்ச்சியில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஸ்கை நியுசின் செய்தியாளர் இது அவர்களின் வாழ்க்கையை முற்றாக மாற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இது இயற்கை அனர்த்தம் இல்லை பேரழிவு என ஒருவர் என்னிடம்தெரிவித்தார் என ஸ்கைநியுஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நகரின் இடிபாடுகளுக்கு சேற்றுமணலிற்குள்  எண்ணிக்கைதெரியாதவர்களின் சடலங்கள்காணப்படக்கூடும்.

கிழக்கு லிபிய நகரம் ஒரு பாரிய மனித புதைகுழிபோல காணப்படுகின்றது -அழிக்கப்பட்ட உயிர்கள் தரைமட்டமான கட்டிடங்கள் அழிக்கப்பட்ட வாகனங்கள் 

மிகப்பெரிய மாடிக்கட்டிடங்கள் அவற்றின் அத்திபாரங்களில் இருந்து பிடுங்கப்பட்டு சேற்றில் வீழ்ந்து கிடக்கின்றன.

எங்கு பாத்தாலும் 360 பாகையில் அழிவுதான் என தெரிவித்துள்ள ஸ்கைநியுசின் செய்தியாளர் அலெக்ஸ் குரோபோர்ட் பிணவாடை கடுமையாக வீசுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்..

தகர்ந்த இரண்டு அணைகளில் இருந்தும் வெளியான நீரி;ன் அளவு மிகவும் வலுவானதாக காணப்பட்டது, அவை பாரிய தொடர்வெடிப்புகள் போல காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய கற்பாறைகள் தொடர்மாடிகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன மூன்று பாலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன,கட்டிடங்கள் தொடர்ச்சியாக தரைமட்டமாகின.

மிக வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்த பெருமளவு நீரிலிருந்து தப்பி வெளியேறுவதற்கு 20 நிமிடங்களேயிருந்தது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் குவியலாக காணப்படும் இடிபாடுகள் கற்பாறைகள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதி வழியாக நாம் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது நாங்கள் இவை ஒரு காலத்தில் மக்களின் வீடுகள் இவை ஒரு காலத்தில் மக்கள் நிறைந்திருந்த கடைதொகுதிகள் வணிகவளாகங்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஸ்கை நியுசின் செய்தியாளர் வீதிகள் கூட இல்லை என தெரிவிக்கி;ன்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04