இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 4-0 என கைப்பற்றியுள்ள நிலையில், வைட் வொஷ் ஆவதை தடுப்பதற்கு இந்த போட்டியில் இலங்கை அணி கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியை பொறுத்தவரையில், இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக சந்திமல் அணியில் இணைத்துக்கொள்ளப்படும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் சம்ஷிக்கு பதிலாக பெஹலுக்வாயோவா அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.