இலங்­கையில் "மொங்கல்" (முறையற்ற) முறை­மை­யி­லான கல்வித் திட்­டமே அமுலில் உள்­ளது. இதில் உட­னடி மாற்­றங்கள் தேவை. அதனை பாலர் பாட­சா­லை­யி­லி­ருந்து ஆரம்­பித்து பல்­க­லைக்­க­ழகம் வரை முன்­னெ­டுக்க வேண்­டு­மென நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ நேற்று சபையில் தெரி­வித்தார். 

சைட்டம் தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்தை எதிர்க்கும் வைத்­திய சங்கம் ஏன் தனியார் மருத்­து­வ­ம­னை­களை எதிர்ப்­ப­தில்­லையென் றும் அமைச்சர் கேள்வி எழுப்­பினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தும் அதி­கார சபையின் கீழ் ஒழுங்­கு­வி­திகள் சட்டம் தொடர்­பி­லான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே    நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ மேற்கண் ட­வாறு தெரி­வித்தார். 

அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; 

சைட்டம் தனியார் பல்­க­லைக்­கழகம் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­தி­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதற்கு நிதி­யு­த­வியும் வழங்­கப்­பட்­டது. 

இன்று கட்­ட­டங்கள் நிர்­மா­ணித்து மாண­வர்கள் கல்வி பயில்­கின்­றனர். அன்று இதனை எதிர்க்­காத  பூனை­களைப்  போல் இருந்த அரச வைத்­தி­யர்கள்  சங்­கத்­தினர்  இன்­றைய நல்­லாட்­சியில் ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் சைட்டத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்­கின்றனர். 

தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­களை எதிர்க்கும் வைத்­தி­யர்கள் தனியார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­து­கி­றார்­களா?

கல்வித் துறையில் இலங்­கையில் எத்­த­னையோ பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்­றுக்­கான போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வ­தில்லை. எதற்­காக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கிறோம் எனத் தெரி­யாமல் பெரும்­பா­லான பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்து கொள்­கின்­றனர். 

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு தெரி­வாக விவ­சா­யிகள் மற்றும் கஷ்­டப்­பட்ட குடும்­பங்­களை சேர்ந்த பிள்­ளை­களே ஆர்ப்­பாட்­டங்­களில் கலந்­து­கொள்­கின்­றனர். உயர்மட்டக் குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் கலந்­து­கொள்­வ­தில்லை. இவ்­வாறு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வீதி­களில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தியே காலத்தை வீணாக்கி விடு­கின்­றார்கள். இறு­தியில் அவர்கள் கல்­வியில் பின்­தங்கி விடு­கின்­றனர். 

எமது நாட்டின் கல்வி முறை­மையே பிழை­யா­னது. அது மொங்­க­லாத்தான் (முறை­யற்­ற­வ­கையில்) உள்­ளது. எனவே கல்­வித்­து­றை யில் மாற்­றங்கள் தேவை. அதனை பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிப்பதை கைவிட்டு பாலர் பாடசாலையிலிருந்து மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என்ற முறையும் மாற்றப்பட வேண்டும். இதனால் மாகாண பாடசாலைக்கு அநீதி ஏற்படுகின்றது  என்றார்.