தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சின் செயலளர் ஆர்.பீ.ஏ. விமலவீரவின் வழிகாட்டலின் கீழ் முற்தரப்பு உயர்மட்டக் குழுவொன்று கடந்த செப்டம்பர் 4 முதல் 7 வரையான காலப்பகுதியில் இந்தோனேசியா நோக்கி ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டனர். மேலும் இக்குழுவானது அந்நாட்டில் காணப்படும் வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான நடைமுறையில் காணப்படும் விடயங்களை தெரிந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து கற்றுக் கொண்ட விடயங்கள் நம் நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் வேலையின்மை காப்புறுதித் திட்ட முன்முயற்சிக்கு மிகவும் வலு சேர்க்கும் ஒரு விடயமாக அமையப் பெறும் என்பதோடு இத்திட்டமானது நாட்டுக்குள் மிகவும் நெகிழ்ச்சியானதும் நியாயமானதுமான தொழிலாளர் சந்தையொன்றினை அமைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்
இந்தோனேசியாவிலுள்ள பீ.பீ.ஜே.எஸ் கெட்டனககரஜன் (BPJS Ketenagakerjaan) எனும் நிறுவனமானது இந்த ஆய்வுச் சுற்றுப் பயணத்துக்கான முழு ஏற்பாட்டையும் அந்நாட்டில் ஏற்பாடு செய்திருந்தமை இங்கு விசேட அமைசமாகும். மேலும் இந்நிறுவனமானது அந்நாட்டில் விசாலமான சமூகப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் என்பதோடு தொழிலாளர் தொடர்பாகன பரந்துபட்ட விடயங்கள் குறிப்பாக தொழிலின்மை காப்புறுதி, தொழில் புரிதலின் போது ஏற்படும் பாதிப்புக்கயுக்கான இழப்பீடு மற்றும் வயது முதிர்ச்சியின் போதான காப்பீட்டுத் திட்டம் போன்ற விடயங்களில் செயற்படும் முன்னணியில் திகழும் ஒரு நிறுவனமாகும்.
இந்த முற்தரப்பு ஆய்வுக் குழுவில் தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு, தொழில் திணைக்களம், முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்களான இலங்கை சுதந்திர பணியாளர் சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரிதிநிதிகளும் பங்குபற்றினர்.
உலகிலுள்ள தொழிலாளர்களில் 18.6 வீதமான தொழிலிழந்த தொழிலாளர்கள் மாத்திரமே தொழிலின்மைக்கான காப்புறுதியில் உள்வாங்கப்பட்டுள்ளனர், இது சமூகப் பாதுகாப்பின் மிக சிறிதளவான கிளையாகவே கணிக்கப்படுகிறது (உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2020). சமூக பாதுகாப்பில் முழுமையான தொழிலின்மைக்கான காப்புறுதி மிகவும் இன்றியமையாததாகும்.
இந்த ஆய்வு சுற்றுப்பயணமானது ஜப்பான் அரசின் நன்கொடையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சமூகப் பாதுகாப்பு வலையைமைப்பை உருவாக்குதல்” நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘இலங்கையில் தொழிலின்மைக்கான காப்புறுதி முறைமையை அபிவிருத்தி செய்தல்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM