டவர் மண்டப அரங்க மன்றத்தின் அகில இலங்கை நாடகப் போட்டி

14 Sep, 2023 | 08:33 PM
image

கல்வி அமைச்சும் டவர் மண்டப அரங்க மன்றமும் இணைந்து நாடக கலையினை வளர்ப்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடக கலையின் உயர்ச்சி குறித்தும் அழகியல் கலையை ரசித்து அனுபவித்து மகிழ்ச்சி அடைகின்ற ஒரு மக்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நாடகப் போட்டிகளை வருடாந்தம் நடத்தி வருகிறது.

இப்போட்டி சிங்கள மொழி மற்றும் தமிழ்மொழி மூலமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் ஊடாக பாடசாலை மாணவர்களின் பாடும் திறன், வாத்தியம் இசைக்கும் திறன், நடனம், நடிப்பு மற்றும் இவை சார்ந்த அழகியல் திறன்கள் வளர்க்கப்படுகிறது. இச்செயற்பாடு தமிழ்ப் பாரம்பரிய நாடகம் பற்றிய அறிவையும் நாடகம் மற்றும் அரங்கியல் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். 

அத்துடன் நாடகத்துறையுடன் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களின் அறிவு, திறன், மனப்பான்மையை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. கலையார்வமும் ஆக்கத்திறனும் கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை இப்போட்டி அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போட்டி மூன்று சுற்று கொண்ட போட்டியாக நடைபொறுகிறது. முதல் சுற்றில் பாடசாலைகளில் இருந்து நாடக எழுத்துருக்களை பெற்றுக்கொள்ளல், இரண்டாம் சுற்றில் அதில் சிறந்த நாடக எழுத்துருக்களை பாடசாலைகளுக்குச் சென்று நாடக ஆற்றுகையாக பார்வையிடுதல், அதில் சிறந்த நாடகங்களை மூன்றாது சுற்றுக்காக கொழும்புக்கு அழைத்து மருதானையில் எள்ள டவர் மண்டபத்தில் மேடையேற்றி இப்போட்டியை நடத்தி வருகிறது டவர் மண்டப அரங்க மன்றம்.

இரண்டாம் சுற்று மாகாண மட்டத்தில் நடைபெறுகிறது என்பதால் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் விருது மற்றும் பணப்பரிசில்களும் வழங்கப்படும்.

இம்முறை முதலாம் சுற்றுப் போட்டிக்கு 33 பாடசாலைகள் விண்ணப்பித்த நிலையில் 18 நாடகங்கள் இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. அதில் 14 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. இவ்வருடம் இரண்டாம் சுற்றுப் பேட்டிகள் ஜூலை மாதம் 29, 30, 31ஆம் திகதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 1, 2ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கொழும்பில் சைவ மங்கையர் வித்தியாலயம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியும் மலையகத்தில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி, ஹட்டன் ஹைலன்ட் கல்லூரி, நுவரெலியா திருத்துவக் கல்லூரி ஆகியனவும் கிழக்கு மாகாணத்தில் பாலமீன் மடு விக்னேஸ்வரா கல்லூரி, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், ஏராவூர் தமிழ் மகா வித்தியாலயம் என்பனவும் வட மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா இந்து கல்லூரி, கட்டையடம்பன் வித்தியாலயம், ராமநாதபுர மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்து கல்லூரி, யாழ். யூனியன் கல்லூரி என்பனவும் பங்குபற்றியிருந்தன.

இரண்டாம் சுற்றுப் போட்டிகளை பார்வையிடுவதற்கு நடுவர்களாக நடிப்பு அரங்கமைப்பு பற்றி கணிப்பதற்கு நாடகக் கலைஞர் முனியாண்டி காளிதாஸ், இசை அமைப்பு பற்றி கணிப்பதற்கு சுருதி பிரபா, டவர் நாடக பாடசாலை பிரதானி கலாநிதி சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெயாங்கொட கலாசார மத்திய நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் 4ஆம், 5ஆம் திகதிகளில் இந்நாடகப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு நாடகம் சார்ந்த பயிற்சிப் பட்டறை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சியில் இப்போட்டியில் கலந்துகொண்ட நாடகங்களின் குறைபாடுகளை எவ்வாறு தீர்க்கலாம், இசையமைப்பு எவ்வாறு அமைய வேண்டும், காட்சி அமைப்பு எவ்வாறு அமைய வேண்டும், நடிப்பு என்பது பற்றிய தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்தது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் சுமார் 60 பேர் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் மூத்த நாடகக் கலைஞர்கள் சிறந்த முறையில் வழிகாட்டல்களை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தனர்.

இப்போட்டிகளின் இறுதி சுற்று செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி டவர் அரங்க மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. இது போட்டியாக நடைபெறவிருந்தாலும் பார்ப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் கடந்த இரு வருடங்களின் பின்னர் இம்முறை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா மற்றும்  பொருளாதார நிலைமை காரணமாக நடைபெறவில்லை. 

இவ்வருடம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ். திஸாநாயக்க வழிகாட்டலின் கீழ் இந்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. 

தமிழ்மொழி மூலமான நாடகப்போட்டி சிங்கள மொழி நாடகப்போட்டிக்கு சமாந்தரமாக நடைபெற்று வருகிறது. 

தமிழ்மொழி நாடக போட்டிக்கு மேற்பார்வையாளராக டவர் மன்றத்தின் தமிழ் மொழி நாடக அபிவிருத்திக்கு பொறுப்பான கலாநிதி சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ் விளங்குகிறார்.

இலங்கையில் நடைபெறும் நாடகப் போட்டிகளில் இப்போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. டவர் மண்டப அரங்க மன்றத்துக்கு பணிப்பாளராக கலாநிதி டி.எம்.எஸ்.திஸாநாயக வந்த பின்னரே தமிழ் மொழி மூலமான நாடகச் செயற்பாடு அதிக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை தமிழ் மொழி மூலம் 33 நாடகங்கள் விண்ணப்பித்திருந்தன. அடுத்த வருடம் அதிகமான பாடசாலை நாடகங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ரீதியில் நடைபெறும் இப்போட்டி பாடசாலை மட்டத்தில் அதி முக்கியமாக கணிக்கப்படுகிறது. இப்போட்டியின் சான்றிதழ் மாணவர்களின் உயர் கல்விச் செயற்பாட்டுக்கு அவசியமானதாகவும் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35
news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37