சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

Published By: Vishnu

14 Sep, 2023 | 09:12 PM
image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இத்திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது.

சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் நிறுவுனரும் யோகக்கலை பயிற்சியின் ஆசானுமாகிய இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் இத்திருமணத்தை கடந்த வியாழக்கிழமை (07) நடத்தியிருந்தார்.

சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் அவர்களை சிவநெறி முறையில் குருவாக ஏற்று இத் திருமண பந்தத்தில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் இணைந்து கொண்டனர். இதன்போது சட்ட நீதியான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.

தம்பதியினருக்கு சிவலிங்கம் ஒன்று வழங்கப்படுவதோடு, ஆண், பெண்ணுக்கும், பெண், ஆணுக்கும் உருத்திராட்சத்தை அணிவித்து திருமணபந்த உறுதியை உரைத்து சிவனுக்கு முன்னிலையில் இத்திருமணம் நிறைவேற்றப்படும் எனவும் இதுவரைக்கும் எட்டு திருமணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சிவ பணியில் உள்ள கலியுகவரதன் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்