யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று வியாழக்கிழமை (14) காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 16 நாட்கள் இடம்பெறவுள்ள உற்சவத்தில் விசேட திருவிழாக்களாக எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழா, 23ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழா, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழா, 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழா, 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழா, 27ஆம் திகதி புதன்கிழமை சப்பற திருவிழா, 28ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா, 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழா, 30ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தம் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவடையும்.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையேற்கும் இடம்பெறவுள்ள இத்திருவிழாக்களில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பருத்தித்துறை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையினர் ஆலய சூழல் பாதுகாப்பு, குடிநீர் வசதி, சுற்றுச்சுழல் தூய்மை தொடர்பில் செயலாற்றி வருகின்றனர்.
அத்துடன், திருவிழா தொடர்பான நடவடிக்கைகளில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM