செல்வ வளத்தை உயர்த்தும் எளிய வழிமுறை...!

14 Sep, 2023 | 09:04 PM
image

எம்மில் பலருக்கும் பெரும்பாலான தருணங்களில் பணம்தான் பாரிய தேவையாக இருக்கிறது. பணம் கிடைக்கும் என்றால் அதற்கான பரிகாரத்தை பலரும் உடனடியாக பின்பற்றவோ, கடைப்பிடிக்கவோ தொடங்குவர். 

பணம் மட்டும் இல்லாமல் பலருக்கு அனைவரிடம் பகிர்ந்து கொள்ள இயலாத பல விடயங்கள் மனதில் இருக்கும். இவை குறித்து யாரிடமும் மனம் திறந்து பேச இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும். 

இதனால் அந்த பிரச்சனைக்கான தீர்வுகள் எதுவென்று தெரியாமல் குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கும். இவர்களும் பின்வரும் பரிகாரத்தை மேற்கொண்டால்... தீர்வு கிடைப்பதுடன் மன அமைதியும், மன மகிழ்ச்சியும் கிடைப்பது உறுதி. உடனே எம்மில் சிலர் பரிகாரத்தை கூறுங்கள் என அவசரம் காட்டுவர்.

ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள அரச மரத்தடி விநாயகரிடமோ..அல்லது அருகில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விநாயகர் சன்னதி முன்பாகவோ சென்று வணங்க வேண்டும். பின் இருபத்தியோரு முறை வலம் வர வேண்டும். அதற்கு முன்னதாக விநாயகரை மனமுருக பிரார்த்தித்து, ஒரு வில்வ இலை மற்றும் இரண்டு ஏலக்காயை எடுத்து நிவேதனமாக வைத்து விட வேண்டும். மனதில் விநாயகரை தியானித்து ஏதேனும் ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் விநாயகரிடம் சொல்ல வேண்டும். அதற்கு மட்டும் தீர்வு வேண்டும் என மனதார பிரார்த்தித்து 21 முறை வலம் வந்த பிறகு... வில்ப இலை மீது வைத்திருக்கும் ஏலக்காயை நீங்கள் சாப்பிட வேண்டும். உங்களுக்கு ஏலக்காயை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால்... வேறு ஏதேனும் வடிவில் அதனை சாப்பிடுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 திங்கட்கிழமைகளில் மேற்கொண்டால் நீங்கள் விநாயகர் முன்வைத்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பணம் தொடர்பான பிரச்சனையை முன் வைத்தால் பணவரவு அல்லது பணம் வருவதற்கான வாய்ப்பு உருவாகும். உடல் ஆரோக்கியம் குறித்த பிரச்சனையை முன் வைத்தாள் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறும் அல்லது சத்திர சிகிச்சையின்றி உங்களது ஆரோக்கியம் மேம்படும். உங்களது மனதில் ஏதேனும் பகிர்ந்து கொள்ள முடியாத அந்தரங்க தவறுகள் இருந்தால்... அவை பாதிக்கப்பட்டவரால் மன்னிக்கப்பட்டு, உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் அல்லது அரிதாக கிடைக்கும் பட்சத்தில் ஒரு முறை கிடைத்த வில்வ இலையை 11 வாரங்களுக்கும் நீங்கள் பத்திரப்படுத்தி பிரார்த்தனைக்கு பயன்படுத்தலாம். விக்னேஸ்வரரை வணங்கி இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்தால்....வெற்றியும், பலனும் உறுதி.

தொகுப்பு - சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்