அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய சிகிச்சை

14 Sep, 2023 | 08:58 PM
image

எம்மில் சிலருக்கு குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட உள்ளரங்குகள், அலுவலக சூழல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பட மாளிகைகளில் இருக்கும் போதும்... வேறு சிலருக்கு வெளிப்புறச் சூழல், மாசு படிந்த வெளிப்புற சூழல் மற்றும் ஒவ்வாமையின் காரணமாகவும்.. அலர்ஜிக்ரினிடிஸ் எனப்படும் ஹே காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி நிவாரணமளித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சோர்வு, இருமல், தொடர்த்து தும்மல், கண்கள் அரிப்பு, கண்கள் சிவத்தல், கண்களில் நீர் வழிதல், நாசி துவாரத்தில் அடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டை வறட்சி அல்லது தொண்டையில் ஒரு வகையான அசௌகரியம்.. போன்ற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அலர்ஜிக்ரினிடிஸ் எனும் பாதிப்பிற்கு அல்லது ஹே காய்ச்சல் எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களினால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக மரங்கள், புல், செல்லப் பிராணிகளின் உமிழ்நீர், சருமம், முடி, தூசு, பூச்சிகள் போன்றவற்றின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பாதிப்பை கண்டறிவதற்கான பிரத்யேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். சிலருக்கு தோலில் துளையிடும் சோதனையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். இத்தகைய பரிசோதனையின் மூலம் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்த துல்லியமான அவதானம் கிடைக்கும்.

இதற்கு மருந்தியல் சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலருக்கு மாத்திரைகள், களிம்புகள், ஸ்பிரே  போன்றவற்றையும் மருத்துவர்கள் நிவாரணத்திற்காக பரிந்துரைப்பர்.‌

வேறு சிலருக்கு ஒவ்வாமையை எதிர்க்கும் மாத்திரைகளை நாக்கிற்கு கீழ் வைத்துக் கொள்ளுமாறும், நீராவியை உள்ளிழுக்குமாறும், மூக்கின் ஒரு பகுதியாக இருக்கும் சைனஸ் பகுதியை தூய்மைப்படுத்திக் கொள்ளுமாறும்.. மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையாக பரிந்துரைப்பர்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10