கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு தொற்று பரவக்கூடிய 102 பாடசாலைகள் இணங்காணப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் சுமார்  9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், அம்பாறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.