தம்புத்தேகம - நொச்சியாகம வீதியின் நாரங்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 42 மற்றும் 44 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.