சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு "இலங்கையை சுத்தப்படுத்துங்கள்" என்கிற தொனிப்பொருளில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி காலை 6.30 மணியளவில் இடம்பெறவுள்ளன.
சர்வதேச அரிமா கழகம் 306 B 2 பிரிவினர் மற்றும் காக்கைத்தீவு கடற்கரைப் பூங்கா சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
பூமியின் பெருமளவு பரப்பினை கொண்டுள்ள கடல் மற்றும் சமுத்திரங்களில் இருந்து நாம் பெறும் இயற்கையான வளங்கள், செல்வங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
எனவே, கடல் மற்றும் சமுத்திரங்களையும் கடல் வளங்களையும் அதற்குள் வாழும் அரிய வகை உயிரினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு மனிதர்களுக்கு உண்டு.
எனினும், கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக், கடதாசிக் கழிவுகள் போன்ற குப்பைகளாலும், நிலம் சார்ந்த நடவடிக்கைகளாலும் கடலும் கடலோரப் பகுதிகளும் அசுத்தமடைந்துள்ளன.
இதனை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக உலகளவில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமையன்று 'சர்வதேச கடலோர தூய்மை தினம்' கொண்டாடப்படுகிறது.
அதன் அடிப்படையில், இவ்வருடம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் உலகளவிலும், குறிப்பாக இலங்கையிலும் கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை நாடெங்கும் உள்ள கடற்கரை பிரதேசங்களில் முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM