(நா.தனுஜா)
இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத்தூதுவர் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகப்பிரதானி சாகல ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கொய்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், 'இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை பொறிக்குள்ளேயே இலங்கை சிக்கியிருக்கின்றது. எனவே இப்போது இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி, எதிர்கால பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 'நாம் மோதலுக்குப் பதிலாக ஒத்துழைப்பைக் கோரவேண்டும். தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக வெளிப்படைத்தன்மையைக் கோரவேண்டும். நாம் பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவேண்டும். அதேவேளை ஒருதரப்பினருக்கு மாத்திரம் நன்மையளிப்பதும், மற்றைய தரப்பினருக்குத் தீங்கை ஏற்படுத்துவதுமான விடயங்களைத் தவிர்க்கவேண்டும். நாம் ஏனையோரை சமத்துவமாக நடாத்தவேண்டும். ஏனைய தரப்பினரின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதுடன் வெளியகத்தரப்பினரின் அநாவசிய தலையீடுகளை முழுமையாக எதிர்க்கவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM